For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதுக்கு 48 போட்டி நடத்துனீங்க? இது அநியாயம்.. ஒத்துக்க மாட்டோம்.. போர்க்கொடி தூக்கும் ரசிகர்கள்!

Recommended Video

WORLD CUP 2019 FINALS ENG VS NZ | முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

லண்டன் : இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றாலும், நியூசிலாந்து அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக சூப்பர் ஓவர் வரை சென்று முடிவுக்கு வந்தது.

இரு அணிகளும் 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் குவித்து போட்டியை டை ஆக்கினர். அடுத்து, சூப்பர் ஓவரும் டை ஆனது. இரண்டு முறை போட்டி டை ஆனாலும், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிக பவுண்டரி

அதிக பவுண்டரி

இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட முக்கிய காரணம், ஒரு விசித்திரமான விதிமுறை தான். அந்த விதிப்படி, சூப்பர் ஓவரும் டை ஆகும் பட்சத்தில் போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

இங்கிலாந்து 24 பவுண்டரிகளும், நியூசிலாந்து 16 பவுண்டரிகளும் அடித்து இருந்தன. இதனால், அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. நியூசிலாந்து அணி தோல்வி அடையாத நிலையில் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி, நியூசிலாந்துடன் பகிர்ந்து கொள்வது தான் நியாயம் என ட்விட்டரில் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

48 போட்டி எதுக்கு?

உலகக்கோப்பை தொடரில் 48 போட்டி நடத்தி விட்டு வெற்றியாளரை பவுண்டரி கணக்கு வைத்து தேர்வு செய்வீர்களா? என பொங்கி உள்ளார்.

அர்த்தமே இல்லை

இந்த விதியில் அர்த்தமே இல்லை. நியூசிலாந்து அணிக்கு அநியாயம் செய்துள்ளது ஐசிசி.

அதிக விக்கெட்

இறுதிப் போட்டியை பவுண்டரியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். இதே அதிக விக்கெட் வைத்து தீர்மானித்தால், நியூசிலாந்து தான் உலக சாம்பியன். கோப்பையை பகிர்ந்து கொள்ளவும். இறுதிப் போட்டியை பவுண்டரியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். இதே அதிக விக்கெட் வைத்து தீர்மானித்தால், நியூசிலாந்து தான் உலக சாம்பியன். கோப்பையை பகிர்ந்து கொள்ளவும்.

சிறுவர் விளையாட்டு

இரு அணிகளும் ஒரே அளவு பவுண்டரி அடித்து இருந்தால், இரு அணிகளும் "ராக் பேப்பர் சிசர்" எனப்படும் சிறுவர் விளையாட்டை விளையாடி வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் என கலாய்த்துள்ளார்.

உயரம்

இரு அணிகளும் ஒரே அளவு பவுண்டரி அடித்து இருந்தால், அடுத்து வீரர்களின் உயரத்தை வைத்து வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்!! முட்டாள்தனமா இருக்கு இல்லையா?

பகிர்ந்து கொள்ளவும்

இந்தப் போட்டி டை என்பது இங்கிலாந்துக்கும் தெரியும். மார்கன் கோப்பையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் புள்ள ரூல்ஸ்

குழந்தைப் புள்ள ரூல்ஸ்.. ஐசிசி மிக அவமானகரமான விஷயத்தை செய்துள்ளது.

Story first published: Monday, July 15, 2019, 3:08 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
ENG vs NZ Cricket World cup 2019 : Fans asks England to share the trophy with New Zealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+