For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இறுதிப் போட்டியிலும் சொதப்பல்.. நம்பி வாய்ப்பு கொடுத்த அணியை ஏமாற்றிய நியூசி. அதிரடி வீரர்!

Recommended Video

World cup 2019 FINALS NZ VS ENG | இறுதிப் போட்டியிலும் சொதப்பல்! அணியை ஏமாற்றிய குப்டில்

லண்டன் : நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் சொதப்பலாக ஆட்டமிழந்து தன் அணியை கைவிட்டார்.

2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் சொதப்பி வந்த நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்டின் குப்டில் மீது நம்பிக்கை வைத்து, அவரை இறுதிப் போட்டியில் களமிறக்கியது நியூசிலாந்து அணி.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்டின் குப்டில் இதுவரை சிறப்பாக ஆடாவிட்டாலும், தன் அனுபவத்தை எல்லாம் திரட்டி, இறுதிப் போட்டியில் தன் இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடினால் எளிதாக வெல்லலாம் என நியூசிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். அதற்கேற்ப அவரும் அதிரடியாக ஒரு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து சிறப்பாக ஆட்டத்தை துவக்கினார்.

விரைவில் அவுட்

விரைவில் அவுட்

ஆனால், 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணியும், ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார் குப்டில். அதன் பின் தொடர்ந்து சொதப்பினார்.

எத்தனை ரன்கள்?

எத்தனை ரன்கள்?

உலகக்கோப்பையில் பத்து போட்டிகளில் விளையாடிய மார்டின் குப்டில் 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 20.66 மட்டுமே. இதில் இரண்டு முதல் பந்து டக் அவுட்களும் அடங்கும். இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கூட வெறும் 1 ரன் தான் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரரான மாட்டின் குப்டில் மிக மோசமான பார்ம் அவுட்டில் இருக்கிறார்.

நியூசிலாந்து ஆதரவு

நியூசிலாந்து ஆதரவு

அவர் கடுமையான பார்ம் அவுட்டில் இருந்தாலும், நியூசிலாந்து அணி அவரை தொடர்ந்து நம்பி வாய்ப்பு அளித்து வந்தது. இறுதிப் போட்டிக்கு முன் பேசும் போது நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தாங்கள் மார்ட்டின் குப்டில்-ஐ நம்புவதாகவும், அவர் சிறப்பாக ஆடினால் என்ன செய்வார் என தெரியும் என்றும் குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பு வழங்கி வந்த அணியை ஏமாற்றி இருக்கிறார் குப்டில்.

Story first published: Sunday, July 14, 2019, 17:44 [IST]
Other articles published on Jul 14, 2019
English summary
ENG vs NZ Cricket World cup 2019 : Martin Guptill failed in final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+