Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 ரன் கொடுத்தது தப்பு… 5 தான் கொடுத்திருக்கணும்.. இங்கிலாந்து வெற்றியே செல்லாது.. திடுக் தகவல்!

Recommended Video

Eoin morgan : நாங்க ஜெயிச்சது இப்படித் தான் உலக கோப்பை சாம்பியன் குறித்து இங்கிலாந்து கேப்டன்-வீடியோ

லண்டன் : உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓவர் த்ரோவான பந்தில் ஐந்து ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆறு ரன்கள் கொடுத்தது தவறு என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி உள்ளனர்.

2019 உலகக்கோப்பை தொடர் விசித்திரமான முடிவை பெற்றது. 50 ஓவர்கள் இரண்டு அணிகளும் சரி சமமான ரன்களை குவித்து போட்டி டை ஆனது. அடுத்து சூப்பர் ஓவரும் டை ஆனது.

செல்லாது.. செல்லாது!

செல்லாது.. செல்லாது!

எனினும், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற காரணத்தால் இங்கிலாந்து கோப்பை வென்றதாக அறிவித்தனர். இந்த நிலையில், இங்கிலாந்து டை செய்ததே செல்லாது. ஓவர்த்ரோ பந்தில் அம்பயர் அளித்த ரன்கள் தவறு என்கிறார்கள்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இங்கிலாந்து - நியூசிலாந்து மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடி வந்தது. அந்த ஓவரில் கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தான் அந்த ஓவர்த்ரோ சம்பவம் நடந்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் ஓட முயற்சித்தார். அப்போது நியூசிலாந்து அணி வீரர் பந்தை எடுத்து ஸ்டம்ப்புகளை நோக்கி வீசினார். அப்போது ஸ்டோக்ஸ், தரையோடு, தரையாக விழுந்து ரன் அவுட்டில் இருந்து தப்ப முயன்றார். அப்போது பந்து, அவரது பேட்டில் பட்டு திசை மாறிச் சென்று பவுண்டரி ஆனது.

ஆறு ரன்கள்

ஆறு ரன்கள்

அம்பயர் ஸ்டோக்ஸ் ஓடிய இரண்டு ரன்கள் மற்றும் ஓவர்த்ரோவில் கிடைத்த நான்கு ரன்கள் என மொத்தம் ஆறு ரன்கள் கொடுத்தார். ஆனால், விதிப்படி இந்த இடத்தில் ஐந்து ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

விதி என்ன?

விதி என்ன?

ஐசிசி விதி 19.8இன் படி ஓவர்த்ரோ அல்லது பீல்டரின் முயற்சியில் பந்து பவுண்டரியை எட்டினால், பெனால்டி ரன்கள் ஏதும் இருந்தால் அது இரண்டு அணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும், பவுண்டரிக்கான ரன்கள் மற்றும் பேட்ஸ்மேன் எடுத்து முடித்த ரன்கள் மற்றும் த்ரோ அல்லது அந்த செயல் நடப்பதற்கு முன்னால் எடுக்கப்பட்ட ரன்கள் வழங்கப்பட வேண்டும்.

தொடர்ந்து குழப்பம்

தொடர்ந்து குழப்பம்

இந்த விதிப்படி பார்த்தால், நியூசிலாந்து பீல்டர் பந்தை எறியும் போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் அதில் ரஷித் இரண்டாவது ரன்னை ஓடி முடிக்கவில்லை. எனவே, அவர்கள் ஓடி முடித்த ஒரு ரன் மற்றும் பவுண்டரிக்காக நான்கு ரன்கள் என ஐந்து ரன்கள் மட்டும் தான் கொடுத்து இருக்க வேண்டும் என்கிறார்கள். எனினும், இதில் குழப்பம் நீடித்து வருகிறது.

நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றி

அப்படி ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தால், நியூசிலாந்து தோல்வி அடைந்து இருக்காது. இங்கிலாந்து அணியால் போட்டியை டை செய்திருக்க முடியாது. ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து இருக்கும். நியூசிலாந்து வெற்றி பெற்று இருக்கும். ஆனால், போட்டி டை ஆனதோடு, சூப்பர் ஓவரும் டை ஆனது. வெற்றியாளர் அதிக பவுண்டரி எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Monday, July 15, 2019, 13:20 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+