147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சேஸிங் சாதனையை செய்த இங்கிலாந்து அணி
கிறைஸ்ட்சர்ச்: 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை இங்கிலாந்து அணி செய்து உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 104 ரன்கள் என்ற இலக்கை மிக குறைந்த ஓவர்களில் எட்டி இந்த இமாலய சாதனையை செய்துள்ளது இங்கிலாந்து.
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களும், இங்கிலாந்து அணி 499 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 254 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணிக்கு 104 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை அதிரடியாக எட்டியது இங்கிலாந்து அணி. அந்த அணியின் துவக்க வீரர் ஜாக் கிரவ்லி ஒரு ரன்னிலும், பென் டக்கெட் 18 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து மூன்றாம் வரிசையில் இறங்கிய இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரின் அதிரடியால் 12.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் போட்டியில் நூறு ரன்களுக்கும் அதிகமான இலக்கை மிகக் குறைந்த ஓவர்களில் எட்டி வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை செய்துள்ளது இங்கிலாந்து அணி. அதேபோல நூறு ரன்களுக்கும் அதிகமான இலக்கை அதிக ரன் ரேட் உடன் எட்டிய அணியாகவும் இங்கிலாந்து அணி சாதனை செய்து உள்ளது.
குறைந்த ஓவர்களில் முடிக்கப்பட்ட டெஸ்ட் ரன்-சேஸ் (100-க்கும் மேற்பட்ட இலக்கு) -
12.4 ஓவர்கள் - இங்கிலாந்து x நியூசிலாந்து , 2024 (இலக்கு: 104)
18.4 ஓவர்கள் - நியூசிலாந்து x வங்கதேசம், 2017 (இலக்கு: 109)
19 ஓவர்கள் - வெஸ்ட் இண்டீஸ் x இங்கிலாந்து, 1999 (இலக்கு: 126)
19.3 ஓவர்கள் - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, 2012 (இலக்கு: 102)
19.5 ஓவர்கள் - தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து, 2012 (இலக்கு: 101)
அதிக ரேட்டில் முடிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்-சேஸ் -
8.21 ரன் ரேட் - இங்கிலாந்து x நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச், 2024
6.82 ரன் ரேட் - வெஸ்ட் இண்டீஸ் x இந்தியா, கிங்ஸ்டன், 1983
6.78 ரன் ரேட் - வெஸ்ட் இண்டீஸ் x இங்கிலாந்து, ஹெடிங்லி, 1995
6.60 ரன் ரேட் - பாகிஸ்தான் x இந்தியா, கராச்சி, 1978
6.19 ரன் ரேட் - பாகிஸ்தான் x இந்தியா, லாகூர், 1978
6.03 ரன் ரேட் - இங்கிலாந்து x பாகிஸ்தான், கராச்சி, 2022


Click it and Unblock the Notifications