உலகில் எந்த பேட்ஸ்மேனும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ரெக்கார்டு.. கேன் வில்லியம்சன் மிரட்டல்
ஹாமில்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினர். இது அவரது 33வது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் முறியடித்து இருக்கிறார்.
உலகில் எந்த பேட்ஸ்மேனும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். ஒரே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து சதங்களை அடித்து இருக்கிறார் கேன் வில்லியம்சன்.

நேற்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து கேன் வில்லியம்சன் சாதனையை முந்தி இருந்தார். ஸ்டீவ் ஸ்மித் தனது 33 வது சதத்தை அடித்திருந்தார். ஒரே நாளில் அந்த ரெக்கார்டை சமன் செய்து இருக்கிறார் கேன் வில்லியம்சன். தற்போது கேன் வில்லியம்சன் தனது 33வது சதத்தை நிறைவு செய்து இருக்கிறார்.
இதில் எந்த கிரிக்கெட் வீரரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு சாதனையை செய்து இருக்கிறார் கேன் வில்லியம்சன். இங்கிலாந்து னைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடந்தது. அந்த மைதானத்தில் நடந்த ஐந்து போட்டிகளில் அவர் தொடர்ந்து சதமடித்து இருக்கிறார்.
ஹாமில்டன் மைதானத்தில் தொடர்ந்து ஐந்தாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து இருக்கிறார். இதுவரை உலகில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஒரே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து சதங்களை அடித்ததில்லை.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி இருக்கிறார் கேன் வில்லியம்சன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஸ்டீவ் ஸ்மித் 10 சதங்கள் அடித்து இருக்கிறார். அவரை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார் வில்லியம்சன்.
மார்னஸ் லாபுஷேன் உடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளனர். இருவரும் 11 சதங்கள் அடித்து உள்ளனர். ஜோ ரூட் 18 சதங்களுடன் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ரோஹித் சர்மா 9 சதங்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications