Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

149 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை.. முதல் ஓவரிலேயே 3 விக்கெட் வீழ்த்தி ஆலி ராபின்சன் சாதனை

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 149 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்த அசாத்திய சாதனை நிகழ்ந்தது.

கடந்த 2024 பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தான் ஆலி ராபின்சன் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்று ஆடி இருந்தார். அதன்பின், சுமார் 2 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் . நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 2-வது ஓவரை வீசிய அவர், தனது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளைச் சாய்த்து உலக சாதனையைப் படைத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவர் மொத்தம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ENG vs NZ Ollie Robinson Creates History with 3 Wickets in Opening Over of Lord s Test Against New Zealand

ராபின்சன் ஓவரில் என்ன நடந்தது?

ஆலி ராபின்சன் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் டெவோன் கான்வே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 5-வது பந்தில் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ரன் ஏதும் எடுக்காமல், அறிமுக வீரர் எமிலியோ கேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஓவரின் கடைசி பந்தான 6-வது பந்தில் ரச்சின் ரவீந்திராவை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தி அவுட்டாக்கினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு அவர் கடும் அதிர்ச்சி அளித்தார்.

வரலாற்றுப் பட்டியலில் ராபின்சன்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் இன்னிங்ஸ் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆலி ராபின்சன் படைத்துள்ளார். 149 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு இங்கிலாந்து வீரரும் இத்தகைய சாதனையைச் செய்தது கிடையாது. உலக அளவில் இந்தச் சாதனையைச் செய்யும் 7-வது பந்துவீச்சாளர் ராபின்சன் ஆவார். இதற்கு முன்பு இலங்கையின் நுவான் சொய்சா (1999 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக) முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இப்பட்டியலில் முதல் நபராக இணைந்தார்.

இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்த சூர்யகுமாரை நீக்கக்கூடாது.. எம்எஸ்கே பிரசாத் வார்னிங்

இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்த சூர்யகுமாரை நீக்கக்கூடாது.. எம்எஸ்கே பிரசாத் வார்னிங்

இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டெஸ்டின் முதல் ஓவரில் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இவர்களைத் தவிர டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து), ஹாரிஸ் சோஹைல் (பாகிஸ்தான்), ஸ்காட் போலண்ட் (ஆஸ்திரேலியா) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 5, 2026, 10:31 [IST]
Other articles published on Jun 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+