Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs NZ: பாகிஸ்தான், நியூசிலாந்து செமி பைனல் வாய்ப்பை நிர்ணயிக்கப் போகும் போட்டி.. டாஸ் முடிவு?

சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 பிரிவில் இன்று நடைபெறும் 49வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து

விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். கொழும்பு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

ENG vs NZ T20 World Cup 2026 Super 8 Match Toss and Playing XI Mitchell Santner Opts to Bat First

மிட்செல் சான்ட்னர் பேட்டி

டாஸ் வென்ற பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் முக்கிய போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம். கடந்த போட்டியில் இந்த ஆடுகளத்தில் விளையாடியது எங்களுக்கு உதவியாக இருக்கும். ஆடுகளம் நாங்கள் நினைத்ததை விட அதிகமாக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. இன்றும் ஆடுகளம் அதேபோலத்தான் காட்சியளிக்கிறது. மைதானத்தின் தன்மையை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றும் களமிறங்குகிறார்கள்" என்று தெரிவித்தார்.

ஹாரி ப்ரூக் பேட்டி

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பேசுகையில், "டாஸ் வென்றிருந்தால் நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியிருப்போம். கடந்த போட்டியை நாங்கள் பார்த்தோம், அதில் பந்து நன்றாகச் சுழன்றது. நியூசிலாந்து ஒரு மிகச்சிறந்த அணி. அவர்களை வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்ற முயற்சிப்போம். எங்கள் பீல்டிங் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக இருந்துள்ளது. கடந்த போட்டியில் சில தவறுகள் நடந்தன, அதைச் சரிசெய்வோம். நான் இன்றும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவேன். எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜேமி ஓவர்டன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரஹான் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

பிளேயிங் லெவன் விவரம்:

நியூசிலாந்து அணி: டிம் சீஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), கோல் மெக்கான்சி, மாட் ஹென்றி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன்.

இங்கிலாந்து அணி: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் பெத்தல், டாம் பான்டன், ஹாரி ப்ரூக் (கேப்டன்), சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ரஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத்.

ஏற்கனவே இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணியும் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். மறுபுறம் நியூசிலாந்து தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும்.

Story first published: Friday, February 27, 2026, 18:44 [IST]
Other articles published on Feb 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+