Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லவேளை தப்பிச்சோம்.. 2வது டெஸ்டில் எஸ்கேப் ஆன பாக்.. செம ஹேப்பி.. இதுதான் காரணம்!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் கூடுதல் ரன்கள் எடுத்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்போது போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டுள்ளது. மழையால் போட்டி பெரும்பாலும் தடைபட்டதால் பாகிஸ்தான் அணி தப்பித்துள்ளது.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸ்

பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸ்

அபித் அலி 60, முகமது ரிஸ்வான் 72, பாபர் ஆசாம் 47 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்க்ஸில் 300 ரன்களை கூட தாண்டாததால் பாகிஸ்தான் அணி சிக்கலில் இருந்தது.

குறுக்கிட்ட மழை

குறுக்கிட்ட மழை

பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம் நான்காம் நாள் காலையில் தான் முடிவுக்கு வந்தது. முதல் இரண்டு நாட்களில் மொத்தமே 86 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டம் முற்றிலுமாக மழையால் கைவிடப்பட்டது.

டிரா ஆகும்

டிரா ஆகும்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 7 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. நான்காம் நாள் ஆட்டமும் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் ஐந்தாம் நாளிலாவது முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியும் இந்தப் போட்டி டிரா ஆக உள்ளது. பாகிஸ்தான் அணி ரன் குவிக்காமல் போனாலும் மழை அந்த அணியை காப்பாற்றி இருக்கிறது.

Story first published: Sunday, August 16, 2020, 20:47 [IST]
Other articles published on Aug 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+