Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகமது கைப் செய்த உலகக்கோப்பை சாதனை ஞாபகம் இருக்கா? அதை மீண்டும் செய்து காட்டிய கிறிஸ் வோக்ஸ்!

Recommended Video

WC 2019: ENG Vs PAK: Chris woaks: கைப் செய்த சாதனையை சமன் செய்த கிறிஸ் வோக்ஸ்!- வீடியோ

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆறாவது உலகக்கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் புதிய உலகக்கோப்பை சாதனை ஒன்றை செய்து, இங்கிலாந்து அணிக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்த உலகக்கோப்பை சாதனையை இதுவரை மூன்று வீரர்களே செய்துள்ளனர். அதில் ஒருவர் தான் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவராக அறியப்படும் இந்தியாவின் முகமது கைப்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது, கிறிஸ் வோக்ஸ் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.

டைவ் அடித்து கேட்ச்

டைவ் அடித்து கேட்ச்

பாகிஸ்தான் அணி நல்ல துவக்கம் பெற்று, பின்னர் 1 விக்கெட் இழந்த நிலையிலும் தொடர்ந்து ரன் எடுத்து வந்தது. அப்போது இமாம் உல் ஹக் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க ஓடி வந்த கிறிஸ் வோக்ஸ், செமையாக டைவ் அடித்து, கேட்ச் பிடித்தார்.

அற்புதமான கேட்ச்

அற்புதமான கேட்ச்

இங்கிலாந்து அணியின் முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் தான் கிரிக்கெட்டில் அற்புதமான கேட்ச் என வர்ணிக்கப்பட்ட நிலையில், அதற்கு போட்டியாக அமைந்தது கிறிஸ் வோக்ஸ்-இன் இந்த கேட்ச்.

நான்கு கேட்ச்கள்

நான்கு கேட்ச்கள்

இமாம் உல் ஹக்-கை தொடர்ந்து முஹம்மது ஹபீஸ், பாபர் ஆசாம், சர்ப்ராஸ் அஹ்மது என மொத்தமாக நான்கு பாகிஸ்தான் வீரர்கள் கொடுத்த கேட்ச்களை பிடித்தார் கிறிஸ் வோக்ஸ்.

அதிக கேட்ச்கள்

அதிக கேட்ச்கள்

இதன் மூலம் கிறிஸ் வோக்ஸ் உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்தார். உலகக்கோப்பையில் இதற்கு முன் இதே சாதனையை மூன்று வீரர்கள் செய்திருந்தனர். அவர்கள் முகமது கைப், உமர் அக்மல் மற்றும் சௌம்யா சர்க்கார்.

முகமது கைப் சாதனை

முகமது கைப் சாதனை

முகமது கைப் 2003 உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நான்கு கேட்ச்கள் பிடித்து அசத்தி இருந்தார். கிறிஸ் வோக்ஸ் உலகக்கோப்பையில் செய்த சாதனை என்பதோடு, இங்கிலாந்து அணிக்காக ஒரே போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்தவர் என்ற சாதனையையும் சேர்த்தே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு மோசம்

பந்துவீச்சு மோசம்

கிறிஸ் வோக்ஸ் பீல்டிங் மட்டுமல்லாது, பந்துவீச்சில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். எனினும், அவரது பந்துவீச்சு மோசமான ஒன்றாகவே இருந்தது. காரணம், ரன்களை வாரி இறைத்தார். 8 ஓவர்கள் பந்து வீசிய கிறிஸ் வோக்ஸ் 71 ரன்கள் கொடுத்து, அதிர்ச்சி அளித்தார்.

வேடிக்கை என்ன?

வேடிக்கை என்ன?

இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் வீசிய 8 ஓவர்களில் ஒன்று மெய்டன் ஓவர். அப்படிப் பார்த்தால் 7 ஓவர்களில் மட்டும் 71 ரன்கள் கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் 348 ரன்கள் குவித்தது.

Story first published: Monday, June 3, 2019, 22:44 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+