Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதே தோனி ஸ்டைல்.. மின்னல் வேக ஸ்டம்பிங்.. கலக்கிய ஜோஸ் பட்லர்! #ENGvsPAK

Recommended Video

அதிரடியாக ரன் குவித்த பாகிஸ்தான் வீரர்கள்.. தவித்த இங்கிலாந்து

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன ஆறாவது உலகக்கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் வீரர் பாக்கர் சமான் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சிக்கி 105 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது பாகிஸ்தான்.

அதில் இருந்து மீண்டு, இந்த முறை இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சை சமாளித்து நல்ல துவக்கம் பெற்றது பாகிஸ்தான் அணி.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

துவக்க வீரர்கள் பாக்கர் சமான் - இமாம் உல் ஹக் முதல் 8 ஓவர்களில் 62 ரன்கள் குவித்து அசத்தினர். பின்னர் மொயீன் அலி - மார்க் வுட் பந்து வீச வந்த பின் அவர்களின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.

முன்னேறிய சமான்

முன்னேறிய சமான்

14வது ஓவரில் மொயீன் அலி பந்து வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தார் பாக்கர் சமான். பந்தை அடிக்க ஒரு அடி முன்னேறிய பாக்கர் சமான், பந்தை தவற விட்டார்.

ஸ்டம்பிங் செய்தார்

ஸ்டம்பிங் செய்தார்

பந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் வசம் தஞ்சம் புகுந்தது. பந்து அவர் கைக்கு சென்ற போது, பாக்கர் சமானின் கால் கிரீஸுக்கு வெளியே இருந்தது. அவர் மீண்டும் காலை கிரீஸுக்குள் கொண்டு வருவதற்குள், பட்லர் ஸ்டம்ப்பிங் செய்தார்.

மின்னல் வேக ஸ்டம்பிங்

மின்னல் வேக ஸ்டம்பிங்

இதையடுத்து பாக்கர் சமான் 36 ரன்கள் அடித்த நிலையில், ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் செய்த ஸ்டம்பிங்கை பார்க்க கிட்டதட்ட தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் போலவே இருந்தது. ரசிகர்கள் சிலர் இதை தோனி ஸ்டம்பிங்குடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

மொயீன் அலி பாக்கர் சமான் மட்டுமின்றி, மற்றொரு துவக்க வீரர் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசாம் உள்ளிட்டோர் விக்கெட்களையும் வீழ்த்தினார். இவர்கள் மூவர் விக்கெட்களை வீழ்த்தினாலும், பாகிஸ்தான் அணி தொடர்ந்து ரன் குவித்தது. இங்கிலாந்து அணி விக்கெட்டும் வீழ்த்த முடியாமல், ரன் குவிப்பையும் தடுக்க முடியாமல் நீண்ட நேரம் தடுமாறியது.

சுதாரித்தனர்

சுதாரித்தனர்

பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 44, பாக்கர் சமான் 36, பாபர் ஆசாம் 63 ரன்கள் குவித்து இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஒட்டு மொத்தமாக தடுமாறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மொத்தமாக சுதாரித்து ரன் குவித்தனர்.

Story first published: Monday, June 3, 2019, 18:45 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+