Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் பயிற்சியாளர் உயிருக்கு ஆபத்து.. உலகக்கோப்பை தோல்வி தான் காரணம்.. பரவும் “பகீர்” வதந்தி!

நாட்டிங்ஹாம் : 2019 உலகக்கோப்பை தொடரை மிக மோசமாகத் துவக்கியது பாகிஸ்தான் அணி.

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியது அந்த அணி. அந்த தோல்விக்கு பின் பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோரை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் வந்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த கிண்டல் எல்லை மீறி பாகிஸ்தான் பயிற்சியாளர் உயிருக்கு ஆபத்து என்ற வதந்தியை கிளப்பும் அளவுக்கு சென்றுள்ளது. அப்படி என்ன வதந்தி அது?

இரண்டு தோல்விகள்

இரண்டு தோல்விகள்

2019 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அடுத்து வங்கதேச அணியிடம் பலமான தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது. இந்த இரண்டு பெரிய தோல்விகளையும் முடிச்சுப் போட்டு பார்த்தனர் சில ரசிகர்கள்.

என்ன முடிச்சு?

என்ன முடிச்சு?

அது என்ன முடிச்சு என்றால்.. 2007 உலகக்கோப்பை தொடரிலும் இதே போல பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணியிடமும், தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணியிடமும் தோல்வி அடைந்தது. அந்த தோல்விகள் இரண்டு அணிகளையும் கடுமையாக பாதித்தது.

மர்மம்

மர்மம்

2007 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் பாதியில் வெளியேற இந்த தோல்விகள் முக்கிய காரணமாக அமைந்தன. அந்த உலகக்கோப்பை தொடர் நடைபெற்ற போதே, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மிக்கி ஆர்தருக்கு ஆபத்து

மிக்கி ஆர்தருக்கு ஆபத்து

2019இலும், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் 2007 உலகக்கோப்பை போலவே தோல்வி அடைந்துள்ளதால், பாப் உல்மர் போலவே, மிக்கி ஆர்தருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

பரவும் வதந்தி

பரவும் வதந்தி

இது புரியாத சிலர், பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததால், உண்மையாகவே பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உயிருக்கு ஆபத்து என நினைத்து இந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள். பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இந்த வதந்தி பரவி வருகிறது.

அரசியல் விளையாட்டு

அரசியல் விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது சாதாரணமான காரியமல்ல. பாப் உல்மர் காலத்திலேயே பல அரசியல், நிர்வாக விளையாட்டுக்களை எல்லாம் சமாளித்து தான் அவர் பயிற்சியாளராக இருந்தார். அவரது மர்ம மரணத்துக்குப் பின் பாகிஸ்தான் அணி சில காலம் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களையே பயிற்சியாளராக வைத்திருந்தது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

மிக்கி ஆர்தர் வரவுக்குப் பின் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை கைப்பற்றியது, அப்போது முதல், மிக்கி ஆர்தருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

பதவி நீக்கம்

பதவி நீக்கம்

எனினும், உலகக்கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 10 போட்டிகளில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. அதனால், உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுவார் என சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

Story first published: Monday, June 3, 2019, 20:29 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+