Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு ட்விஸ்ட்டா.. எதிர்பார்க்கவே இல்லை.. இங்கிலாந்துக்கு ஷாக் தந்த பாகிஸ்தான்!

மான்செஸ்டர் : பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வென்றால் கூட சாதனை என முன்னாள் பாகிஸ்தான் வீரர்களே கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் அனுபவ பந்துவீச்சாளர்களிடம் பாகிஸ்தான் அணி எளிதாக வீழ்ந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும் படி ரன் குவித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், பாகிஸ்தான் அணி எளிதாக 300 ரன்களை கடந்தது.

ஷான் மசூத் சதம்

ஷான் மசூத் சதம்

அதற்கு முக்கிய காரணம் துவக்க வீரர் ஷான் மசூத். அவர் படு நிதான ஆட்டம் ஆடி சதம் கடந்தார். 319 பந்துகளில் 156 ரன்கள் எடுத்தார் அவர். பாபர் ஆசாம் 69, ஷதாப் கான் 45 ரன்கள் எடுத்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

பாகிஸ்தான் ஸ்கோர்

பாகிஸ்தான் ஸ்கோர்

இந்த மூன்று பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 326 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், பிராடு தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். வோக்ஸ் 2, பெஸ் 1, ஆண்டர்சன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

பவுலிங்கில் கோட்டை விட்டாலும் பேட்டிங்கில் இங்கிலாந்து அணி அசத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும், ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது அப்பாஸ் பந்துவீச்சில் 6 ஓவர்களுக்குள் 3 முக்கிய விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து அணி.

காப்பாற்றிய போப்

காப்பாற்றிய போப்

பர்ன்ஸ் 4, ஸிப்லி 8, பென் ஸ்டோக்ஸ் 0, ஜோ ரூட் 14 ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அடுத்து மிடில் ஆர்டரில் போப் 62, பட்லர் 38 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் மீண்டும் விக்கெட்கள் சரிந்தன.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

ஸ்டூவர்ட் பிராடு 29 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி 200 ரன்களை கடக்க உதவினார். இங்கிலாந்து அணி 70.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. யாசிர் ஷா 4, அப்பாஸ் 2, ஷதாப் கான் 2, ஷஹீன் ஷா அப்ரிடி 1, நசீம் ஷா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் முன்னிலை

பாகிஸ்தான் முன்னிலை

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடி வருகிறது பாகிஸ்தான் அணி. இரண்டாம் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணி 250 ரன்கள் எடுத்தால் கூட இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வெல்வது கடினம் தான்.

எதிர்பாராத நிலை

எதிர்பாராத நிலை

போட்டியின் துவக்கத்தில் இங்கிலாந்து அணி வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றிக்கு ஒரு படி அருகே முன்னேறி உள்ளது. இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் மட்டும் அந்த அணி சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி ஆகி விடும்.

Story first published: Saturday, August 8, 2020, 3:01 [IST]
Other articles published on Aug 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+