195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அசுரத்தனமாக சேஸிங் செய்து வென்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 195 ரன்கள் குவித்தது.

ஆனால், அந்த இமாலய ஸ்கோரை அசால்ட்டாக அடித்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

இந்த விருதை வாங்கறது என்னோட கனவு... பொறுப்புகளை இந்த விருது அதிகப்படுத்தியிருக்கு

இரண்டாவது டி20

இரண்டாவது டி20

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - பாக்கர் ஜமான் நல்ல துவக்கம் அளித்தனர். பாக்கர் ஜமான் அதிரடியாக ஆடி தெறிக்க விட்டார்.

பாபர் ஆசாம் அரைசதம்

பாபர் ஆசாம் அரைசதம்

ஜமான் 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாபர் ஆசாம் நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகம் எடுத்தார். 37 பந்துகளில் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினார். 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த அவர் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஹபீஸ் அதிரடி

ஹபீஸ் அதிரடி

மூத்த வீரர்கள் முகமது ஹபீஸ், சோயப் மாலிக் அடுத்து ஜோடி சேர்ந்தனர். மாலிக் ஒரு பக்கம் நின்று வேடிக்கை பார்க்க, ஹபீஸ் பவுண்டரி அடித்து தெறிக்க விட்டார். மாலிக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஹபீஸ் தனி ஆளாக ரன் குவித்து வந்தார்.

பாகிஸ்தான் ஸ்கோர்

பாகிஸ்தான் ஸ்கோர்

36 பந்துகளில் 69 ரன்கள் குவித்த ஹபீஸ் 5 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் 19.5வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். இப்திகார் அஹ்மத் 9 ரன்கள் சேர்த்து இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்து இருந்தது.

பட்டாசு பேக்டரி

பட்டாசு பேக்டரி

சரவெடி ஆட்டம் ஆடிய பாகிஸ்தான் அணி 196 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்து இங்கிலாந்து அணிக்கு சவால் விட்டு இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி பட்டாசு பேக்டரி என்பதை நிரூபித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து அணி போல அதிரடி ஆட்டம் ஆடும் திறன் எந்த அணிக்கும் இல்லை. அதை மீண்டும் கண்கூடாக கண்டனர் ரசிகர்கள்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டாம் பான்டன் 16 பந்துகளில் 20, பேர்ஸ்டோ 24 பந்துகளில் 44 ரன்கள் குவித்து 7வது ஓவரில் வரிசையாக ஆட்டமிழந்தனர். அப்போதே இங்கிலாந்து அணி 66 ரன்கள் எடுத்து இருந்தது. பாகிஸ்தான் அணி அங்கே இருந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இயான் மார்கன்

இயான் மார்கன்

ஆனால், மலன் மற்றும் இயான் மார்கன் இணைந்து அதிரடி ஆட்டத்தை துவக்கினர். இங்கிலாந்து கேப்டன் மார்கன் 33 பந்தில் 66 ரன்கள் குவித்தார். 6 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து அவர் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தொடர்ந்து 9 - 10 ரன்கள் ரன் ரேட்டிலேயே ஆடி வந்தது.

கடைசி வரை நின்ற மலன்

கடைசி வரை நின்ற மலன்

மார்கன் சென்ற பின் மொயீன் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் பில்லிங்க்ஸ் 5 பந்தில் 10 ரன் எடுத்து நடையைக் கட்டினார். எனினும், மலன் மறுபுறம் ஆட்டமிழக்காமல் நின்று சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தார். இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதிலடி

பதிலடி

அதிரடி ஆட்டம் ஆடிய மலன் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் ஹபீஸ், பாபர் ஆசாம் அரைசதம் அடித்த நிலையில், இங்கிலாந்து அணியில் மார்கன், மலன் ஜோடி அதற்கு பதிலடி கொடுத்து சேஸிங்கையும் வெற்றிகரமாக முடித்து. டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ENG vs PAK : England vs Pakistan 2nd T20 match report - England won the toss and chose to bowl first. Pakistan got a good start with Babar Azam - Fakhar Zaman.
Story first published: Sunday, August 30, 2020, 20:18 [IST]
Other articles published on Aug 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X