Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

Recommended Video

IPL 2020ல் இதை Miss செய்வீங்க

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வென்றாலே தொடரை வெல்லும் நிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. அந்த அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.

இங்கிலாந்து அணி மாற்றம்

இங்கிலாந்து அணி மாற்றம்

இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் தனிப்பட்ட காரணங்களால் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளார். முதல் டெஸ்டில் ஆடிய ஜோப்ரா ஆர்ச்சருக்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது.

உள்ளே வந்த 2 வீரர்கள் யார்?

உள்ளே வந்த 2 வீரர்கள் யார்?

இவர்கள் இருவருக்கும் பதில் ஸாக் கிரவ்லி மற்றும் சாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டனர். ஸாக் கிரவ்லி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். சாம் கர்ரன் இளம் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர். சாம் கர்ரனுக்கு ஏன் அதிக வாய்ப்பு அளிப்பதில்லை? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்படும் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறாதது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. முதல் டெஸ்டில் கூட முக்கியமான நேரத்தில் குறுகிய நேரத்தில் 2 விக்கெட்கள் வீழ்த்தி அணிக்கு திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி மாற்றம்

பாகிஸ்தான் அணி மாற்றம்

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் ஷதாப் கான் முதல் டெஸ்டில் அதிக ஓவர்கள் பந்து வீசவில்லை. இரண்டாவது டெஸ்டில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என்ற முடிவில் இருந்த பாகிஸ்தான் அணி அவரை நீக்கியது.

கூடுதல் பேட்ஸ்மேன்

கூடுதல் பேட்ஸ்மேன்

அவருக்கு பதில் கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை அணியில் சேர்த்தது. அவர் தான் பாவாத் ஆலம். இவர் கடைசியாக 2009இல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடி இருந்தார். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளது பாகிஸ்தான் அணி.

பாவாத் ஆலம்

பாவாத் ஆலம்

பாவாத் ஆலம் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர். ஆனால், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் பேட்டிங்

போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் டெஸ்டில் சதம் அடித்த துவக்க வீரர் ஷான் மசூத் ஆண்டர்சன் பந்துவீச்சில் 3வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் அபித் அலி - அசார் அலி ஜோடி பேட்டிங் செய்து வருகிறது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

பாகிஸ்தான் அணி உணவு இடைவேளைக்கு முன் 23.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து இருந்தது. அபித் அலி 33, அசார் அலி 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 400 ரன்களை குவிக்கும் முயற்சியில் உள்ளது.

Story first published: Thursday, August 13, 2020, 20:46 [IST]
Other articles published on Aug 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+