Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மானத்தை காப்பாற்றிய பாக். விக்கெட் கீப்பர்.. இங்கிலாந்துக்கு “வட போச்சே”!

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து ஓரளவு மீண்டது.

Recommended Video

ENG VS PAK 2nd Test Day 2 : பாகிஸ்தான் மானத்தைக் காத்த முகம்மது ரிஸ்வான்

பாகிஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் சுருட்டும் வாய்ப்பை வீணடித்தது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் பின் வரிசை வீரர்களுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டி

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ஷான் மசூத் 1 ரன் எடுத்து ஏமாற்றினார்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

அபித் அலி 60, அசார் அலி 20, பாபர் ஆசாம் 47, ஆசாத் ஷபிக் 5, பாவாத் ஆலம் 0 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 158 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. அடுத்து ஆட வந்த முகமது ரிஸ்வான் பின் வரிசை வீரர்களுடன் கூட்டணி அமைத்து ஆடினார்.

அபார ஒத்துழைப்பு

அபார ஒத்துழைப்பு

பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்குள் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஸ்வான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தார். யாசிர் ஷா 16 பந்துகளில் 5, ஷஹீன் ஷா அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமல் 19 பந்துகள் சந்தித்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

ரிஸ்வான் அரைசதம் கடந்தார்

ரிஸ்வான் அரைசதம் கடந்தார்

176 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான். அதன் பின் முகமது அப்பாஸ் உடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அரைசதம் கடந்தார். அப்பாஸ் விக்கெட்டை காக்கும் பணியை மட்டுமே செய்தார். பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது.

பாகிஸ்தான் ஸ்கோர்

பாகிஸ்தான் ஸ்கோர்

தேநீர் இடைவேளைக்கு முன் பாகிஸ்தான் அணி 215 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து ஆடி வந்தது. ரிஸ்வான் 53, அப்பாஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் 3, பிராடு 2, சாம் கர்ரன் 1, கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

முன்னிலை பெறும் வாய்ப்பு

முன்னிலை பெறும் வாய்ப்பு

பாகிஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் வீழ்த்தி இருந்தால் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் பெரிய அளவில் முன்னிலை பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கும். முக்கிய பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்திய இங்கிலாந்து அணி பின் வரிசை வீரர்கள் விஷயத்தில் ஏமாற்றம் அளித்தது.

Story first published: Friday, August 14, 2020, 21:51 [IST]
Other articles published on Aug 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+