Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் டாஸ் வெற்றி.. வேகத்தில் மிரட்டிய இங்கிலாந்து.. பெரும் எதிர்பார்ப்பில் முதல் டெஸ்ட்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கியது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே பாகிஸ்தான் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுதான்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து அணி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் 2 - 1 என வென்ற அந்த அணி அடுத்து பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கியது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு அணிகளும் முழு அளவில் பந்துவீச்சை தயார் செய்து இருந்தன. பாகிஸ்தான் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் என மூன்று அனுபவ வேகப் பந்துவீச்சாளர்களும், பார்மில் இருக்கும் ஜோப்ரா ஆர்ச்சரும் இடம் பெற்றனர். இரு அணிகளும் பந்துவீச்சில் என்ன செய்யப் போகின்றன என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

துவக்கம் எப்படி?

துவக்கம் எப்படி?

பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத், அபித் அலி துவக்கம் அளித்தனர். அவர்கள் இருவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு ஓவர்களை சமாளித்து விக்கெட்டை காப்பாற்றினர். அடுத்து வோக்ஸ் - ஆர்ச்சர் கூட்டணியாக பந்து வீசினர்.

ஆர்ச்சர் மிரட்டல்

ஆர்ச்சர் மிரட்டல்

அப்போது ஆர்ச்சரின் இரண்டாவது ஓவரில் அபித் அலி பவுல்டு அவுட் ஆகி தன் விக்கெட்டை பறிகொடுத்தார். பாகிஸ்தான் அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது. ஷான் மசூத், கேப்டன் ஆற அசார் அலி களத்தில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, August 5, 2020, 19:39 [IST]
Other articles published on Aug 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+