For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

PAK vs ENG - ஹாரி புருக் முச்சதம்.. அதிவேகமாக டெஸ்டில் முச்சதம் அடித்த வீரர்கள் பட்டியல்

முல்தான் : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வருகிறது. முல்தானில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.இதன் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது.

ஒரு கட்டத்தில் ஜோ ரூட் ஜோடி 400 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜோ ரூட் 262 ரன்கள் ஆட்டம் இழக்க ஹாரி புரூக் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 322 பந்துகளில் 317 ரன்கள் குவித்தார்.

eng vs pak harry brook joe root pakistan national cricket team england cricket team

இதில் 29 பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஹாரி புரூக் முச்சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

சேவாக் 278 பந்துகளில் முச்சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் தான் சேவாக் இந்த சாதனையை படைத்தார். தற்போது இங்கிலாந்து வீரர் ஹாரி புருக், இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். 310 பந்துகளில் அவர் முச்சதம் அடித்து அசத்திருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் இருக்கிறார். அவர் 362 பந்துகளில் முச்சதம் அடித்தார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் மீண்டும் சேவாக்க இருக்கிறார். அவர் இதே பாகிஸ்தானுக்கு எதிராக இதே முல்தான் மைதானத்தில் 2004 ஆம் ஆண்டு 364 பந்துகளில் முச்சதம் அடித்தார்.இதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் அடிக்கப்பட்ட பட்டியலில் இங்கிலாந்து அணி தற்போது நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை 952 ரன்கள் குவித்தது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 903 ரன்கள் எடுத்தது. மீண்டும் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக 849 ரன்கள் குவித்தது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து இருக்கிறது.

Story first published: Thursday, October 10, 2024, 23:36 [IST]
Other articles published on Oct 10, 2024
English summary
Eng vs Pak - Harry Brook Triple century - List of Fastest 300 in Test cricket History PAK vs ENG - ஹாரி புருக் முச்சதம்.. அதிவேகமாக டெஸ்டில் முச்சதம் அடித்த வீரர்கள் பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+