மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓரளவுக்கு திருப்திகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முல்தான் ஆடுகளம் முதல் டெஸ்ட் போட்டியில் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்ததாக கூறி பலரும் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர்.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே ஆடுகளத்தில் நடந்தாலும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான சூழல் இருந்தது. இந்த நிலையில் முதல் நாளில் பாகிஸ்தான் அணி 259 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது.

ரன்களும் விக்கெட்டுகளும் சரிசமமாக விழுந்து இருப்பதால், இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற வகையில் தான் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ஆடுகளத்தில் பவுண்டரி லைனில் இருந்த புற்கள் வெட்டப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பவுண்டரி லைனில் ஆடுகளம் கரடு முரடாக காட்சியளிக்கிறது.
இதனால் பந்து அங்கு செல்லும்போது அது விரைவில் பழையதாக மாறிவிடும். இதை வைத்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் யோசனை தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் பந்து பழையதாக மாறினால் ரிவர்ஸ் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுக்க இங்கிலாந்து அணி முயற்சி செய்து வந்தது. ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வேண்டும் என்றால் பந்தை ஒரு பகுதியில் பளபள என புதியதாகவும் மறுபகுதி கொஞ்சம் பழையதாகவும் இருக்க வேண்டும்.
இதனால் ஒரு பகுதியை பழையதாக வீரர்கள் தங்களது ஜெர்சியில் பந்தை போட்டு தேய்ப்பார்கள். ஆனால் ஜோ ரூட் இன்று செய்த ஒரு சம்பவம் ரசிகர்களை குபீர் என சிரிப்பலையில் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஜேக் லீச்க்கு மண்டையில் முடி இல்லாமல் வழுக்கை தலையுடன் காட்சியளிப்பார். இதனால் ஜோ ரூட் அவருடைய மண்டையில் பந்தை ஒருபுறம் நன்றாக தேய்த்து அதனை பழையதாக்க முயற்சி செய்தார்.
ஜோரூட்டின் இந்த செயலைப் பார்த்து ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் சிரிப்பழலையில் ஆழ்ந்திருக்கிறது. எனினும் ஜோ ரூட் பந்தை வேண்டும் என்று சேதப்படுத்தியதாகவும் தலையில் தேய்த்து பந்தை பழையதாக மாற்ற விதிப்படி அனுமதி இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஜோ ரூட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.