ENG vs PAK - ஜோ ரூட் சாதனை சதம்.. கவாஸ்கர், லாரா சாதனை முறியடிப்பு.. குக் மாபெரும் சாதனையும் உடைப்பு
முல்தான் : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு, இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான அணி 556 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராலி 78 ரன்களும், ஆலிவ் போப் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இந்த நினைவில் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார். ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர்.
இந்த சூழலில் ஜோ ரூட் 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி இருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்,வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான், இலங்கை வீர ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அலெஸ்டர் குக்கை ஜோ ரூட் பின்னுக்கு தள்ளியிருக்கிறார். குக் சர்வதேச டெஸ்ட் 12,472 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜோ ரூட் தற்போது 12,500 ரன்கள் எடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 2024 ஆம் ஆண்டில் ஜோ ரூட் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஜோ ரூட் 18 டெஸ்ட் சதம் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய வாழ்நாள் கிரிக்கெட்டில் 2012 இல் இருந்து 2020 வரை மொத்தமே 17 சதம் அடித்த ரூட், 2021 முதல் 2024 வரை 18 சதங்கள் அடித்து இருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications