Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்சமாம் பரவால போல.. என்னப்பா மலை மாதிரி இருக்காரு.. 100 கிலோ வெய்ட்.. யார் இந்த பாகிஸ்தான் வீரர்?

லண்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் அசாம் கான் ஆட்டமிழந்த விதம் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிக்கெட் விளையாட்டுக்கு தீவிரமான ஃபிட்னஸ் தேவையில்லை என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் விராட் கோலி, மெக்கல்லம் ஆகியோரின் வருகைக்கு பின் ஃபிட்னஸ் என்பது அத்தியாசமான ஒன்றாக அமைந்தது. அனைத்து அணிகளிலும் வீரர்கள் விளையாட யோ-யோ டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டது.

T20 World Cup 2024 T20 World Cup Cricket 20 2024 20

ஆனால் பாகிஸ்தான் அணியில் அதுபோன்ற எந்த ஃபிட்னஸ் தேர்வுகளும் கிடையாது. அதற்கு எடுத்துக் காட்டாக வந்துள்ளார் இளம் விக்கெட் கீப்பரான அசாம் கான். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கானின் மகனான அசாம் கான், 25 வயதில் பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

பிஎஸ்எல் தொடரில் அசாம் கானின் அபார ஆட்டம் காரணமாக டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிட்னஸ் என்றால் கிலோ எவ்வளவு என்ற கேள்வியை கேட்கும் அளவிற்கு அசாம் கானின் உடல் எடை அமைந்துள்ளது. பிஎஸ்எல் தொடரில் சுமார் 130 கிலோ எடையில் விளையாடி வந்த அசாம் கான், பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.

அதன்பின்னரே பாகிஸ்தான் அணியில் அசாம் கான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக்கின் ஜெராக்ஸ் போல் அசாம் கான் இருக்கிறார். பேட்டிங்கில் ரன்களை சேர்த்தாலும், ஓடுவதற்கு வழக்கத்தை விடவும் அதிகமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் பவுண்டரி, சிக்சர்களை எளிதாக விளாச கூடிய வீரர் என்பதால் பாகிஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் மார்க் வுட் வீசிய அபாரமான பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் டக் அவுட்டாகி வெளியேறினார். அந்த பந்து கிளவுசிஸ் உரசி தோளில் அடித்து சென்றது. இதன் மூலமாக அசாம் கானின் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். இவர் ஆட்டமிழந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Friday, May 31, 2024, 10:04 [IST]
Other articles published on May 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+