Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி தான் ஆட்டமே இருக்கு.. ஆல்ரவுண்டர்களை கொத்தாக தூக்கிய இங்கிலாந்து.. RSA அணியில் கேப்டன் நீக்கம்?

மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த அணிகளான இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்திய பின் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்தது. அதேபோல் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை வங்கதேச அணியை மட்டும் வீழ்த்திவிட்டு, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.

ENG vs RSA: Ben Stokes back to England and won the toss and chose to bowl against South Africa in the World Cup 2023

இதனால் இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதேபோல் தனது ஆதர்ச நாயகனான சச்சினின் சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.

டாஸ் வென்ற பின் இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேசுகையில், மும்பை மைதானம் சேஸிங்கிற்கு சாதகமானது. அதனால் தான் பந்துவீச்சை தேர்வு செய்தோம். கடந்த போட்டிகளில் விளையாடியதை பற்றி நினைத்து பார்க்க விரும்பவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இண்டஹ் போட்டியில் பென் ஸ்டோக்ஸ், வில்லி மற்ரும் அட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதமாக இருக்கும்.

எங்களின் அட்டாக்கிங் ஆட்டத்தை ஆட வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மார்க்ரம் பேசுகையில், பவுமா உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு பதிலாக ரீஸா சேர்க்கப்பட்டுள்ளார். இது அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைக்கிறேன். பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் ஸ்விங் இருக்கும். கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, October 21, 2023, 14:06 [IST]
Other articles published on Oct 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+