Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs SA: தென்னாப்பிரிக்காவை மிரட்டிய பென் ஸ்டோக்ஸ்.. வெற்றியுடன் துவக்கிய இங்கிலாந்து!!

Recommended Video

ICC WC 2019: ENG vs SA: இங்கிலாந்து அபார வெற்றி..தென்னாப்பிரிக்கா பரிதாப தோல்வி!- வீடியோ

லண்டன்: 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

1
43644

முதலில் பேட்டிங் செய்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து. சேஸிங்கில் சொதப்பிய தென்னாப்பிரிக்கா அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து, போட்டியில் தோல்வி அடைந்தது.

2014க்குப் பின்..

2014க்குப் பின்..

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் 2014க்குப் பின் இங்கிலாந்து அணி முதன்முறையாக பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முனைப்பு

முனைப்பு

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா, இரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பை வென்றதில்லை. எனவே, இரு அணிகளும் இந்த முறை உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதோடு, தொடரின் முதல் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி ஆடின.

டக் அவுட் ஆனார்

டக் அவுட் ஆனார்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இம்ரான் தாஹிர் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

அதிரடி ரன் குவிப்பு

அதிரடி ரன் குவிப்பு

முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்தாலும், இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். ஜேசன் ராய் 54, ஜோ ரூட் 51, இயான் மார்கன் 57, பென் ஸ்டோக்ஸ் 89 என நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர்.

இங்கிலாந்து ஸ்கோர்

இங்கிலாந்து ஸ்கோர்

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் இழந்து 311 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 350+ ரன்களை எட்டும் என ஒரு கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் கடைசி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, ரன் குவிக்க முடியாமல் திணறியது. இம்ரான் தாஹிர் 2, லுங்கி நிகிடி 3, ரபாடா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

அடுத்து சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் பத்து ஓவர்களில் எய்டன் மார்கிரம் 11, பாப் டு ப்ளேசிஸ் 5 ஆகியோரை இழந்தது. துவக்க வீரர் ஹஷிம் அம்லா காயமடைந்து ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியதும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஆட்டம் கண்ட பேட்டிங்

ஆட்டம் கண்ட பேட்டிங்

டி காக் 68, டஸ்ஸன் 50 அரைசதம் அடித்து அணியை மீட்டனர். எனினும், அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, தென்னாப்பிரிக்கா அணி ஆட்டம் கண்டது. ஹஷிம் அம்லா மீண்டும் பேட்டிங் ஆட வந்தும் எந்த பயனும் இல்லை. அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா தோல்வி

தென்னாப்பிரிக்கா தோல்வி

தென்னாப்பிரிக்க அணி 39.5 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே அடித்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் 3, பென் ஸ்டோக்ஸ் 2, பிளங்கட் 2, அதில் ரஷித் 1, மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறந்து விளங்கிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது இங்கிலாந்து அணி.

Story first published: Friday, May 31, 2019, 7:58 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+