For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாஸ் போச்சு.. ஸ்டெய்ன் இல்லை.. ரிட்டையர்ட் ஹர்ட்.. சுத்தமாக அதிர்ஷ்டம் இல்லாத தென்னாப்பிரிக்கா!!

Recommended Video

ICC WC 2019: ENG vs SA: இங்கிலாந்து அபார வெற்றி..தென்னாப்பிரிக்கா பரிதாப தோல்வி!- வீடியோ

லண்டன் : தென்னாப்பிரிக்கா அணி இதுவரை உலகக்கோப்பை வென்றதே இல்லை. இத்தனைக்கும் அந்த அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கிரிக்கெட் அணிகளில் ஒன்று.

ஆனால், உலகக்கோப்பை என்றாலே அந்த அணிக்கு துரதிர்ஷ்டம் கூடவே வந்துவிடும். இதற்கு முன் நடந்த உலகக்கோப்பை தொடர்களில் ஏதாவது முக்கிய கட்டத்தில் அந்த அணி மோசமான துரதிர்ஷ்ட நிகழ்வுகளால் பாதிக்கப்படும்.

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த முறையும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அப்படி என்ன நடந்தது?

சுமாரான ஆட்டம்

சுமாரான ஆட்டம்

உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே சுமாராகவே செயல்பட்டது.

பந்துவீச்சு தேர்வு

பந்துவீச்சு தேர்வு

இந்தப் போட்டியில் டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என தெரிந்தும் அவர் ஏன் பந்துவீச்சை தேர்வு செய்தார் என்ற குழப்பம் இருந்தது.

சேஸிங் மோசம்

சேஸிங் மோசம்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் ஓவரில் தடுமாறினாலும், பின்னர் தொடர்ந்து அதிரடி காட்டி, 311 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டாஸ் முடிவு சரியா?

டாஸ் முடிவு சரியா?

பேட்டிங்கில் தென்னாப்பிரிக்கா திணறியது. ரன் ரேட் அழுத்தமும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றவுடன் பேட்டிங் தேர்வு செய்து இருக்கலாமா? என்ற எண்ணமே போட்டியின் முடிவில் எழுந்தது.

ஸ்டெய்ன் காயம்

ஸ்டெய்ன் காயம்

உலகக்கோப்பை தொடருக்கு முன் தென்னாப்பிரிக்கா அணியின் அனுபவ வீரர் டேல் ஸ்டெய்ன் காயமடைந்தார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடிய ஸ்டெய்ன் காயத்தால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

அவரால் ஆடமுடியாது

அவரால் ஆடமுடியாது

அதன் பின் உலகக்கோப்பை தொடரில் முதல் சில போட்டிகளில் அவரால் ஆடமுடியாது. காயம் குணமாக ஒரு வார காலம் ஆகலாம் என கூறப்பட்டது. இதனால், உலகக்கோப்பை தொடரின் முதல் மற்றும் முக்கிய போட்டியில் டேல் ஸ்டெய்ன் பங்கேற்கவில்லை.

உதவி இருப்பார்

உதவி இருப்பார்

வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் பங்கேற்று இருந்தால், அவரது அனுபவம் அந்த அணிக்கு பெரிதும் உதவி இருக்கும். அவர் இல்லாதது, தென்னாப்பிரிக்கா அணியை பந்துவீச்சில் பலவீனப்படுத்தியது என்பதே உண்மை.

ரிடையர்ட் ஹர்ட்

ரிடையர்ட் ஹர்ட்

அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 312 ரன்கள் என்ற சற்றே கடின இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் ஹஷிம் அம்லா தலையில் காயமடைந்து ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

தோல்விக்கு முக்கிய காரணம்

தோல்விக்கு முக்கிய காரணம்

அது பேட்டிங்கில் சிறு பின்னடைவை அளித்தது. அவருக்கு பின் வந்த இரு பேட்ஸ்மேன்கள் 10 ஓவருக்குள் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணி சிக்கலில் ஆழ்ந்தது. அதுதான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

துரதிர்ஷ்டம்

துரதிர்ஷ்டம்

இப்படி டாஸ், பந்துவீச்சு, பேட்டிங் என பல வகைகளிலும் அதிர்ஷ்டம் இன்றியே 2019 உலகக்கோப்பை தொடரை துவக்கியுள்ளது தென்னாப்பிரிக்கா. அடுத்தடுத்த போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுமா? அல்லது துரதிர்ஷ்டம் துரத்துமா?

Story first published: Friday, May 31, 2019, 12:44 [IST]
Other articles published on May 31, 2019
English summary
ENG vs SA Cricket World cup 2019 : South Africa still unlucky in world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+