For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ENG vs SL: மாபெரும் டெஸ்ட் சாதனை படைத்த ஜாம்பவான்.. இங்கிலாந்து அபார வெற்றி.. இலங்கை தோல்வி

மான்செஸ்டர்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவரது இந்த அரைசதம் மூலம் ராகுல் டிராவிட் மற்றும் ஆலன் பார்டரின் மாபெரும் டெஸ்ட் சாதனைகளை அவர் முறியடித்து அசத்தி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இலங்கை அணி 236 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய இலங்கை அணி 326 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் காமிந்து மெண்டிஸ் 113 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Joe Root England Sri Lanka

இந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஜோ ரூட் அடித்த இந்த அரை சதம் அவரது 64வது அரை சதம் ஆகும். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். ஆலன் பார்டர் மற்றும் ராகுல் டிராவிட் 63 டெஸ்ட் அரை சதங்கள் அடித்துள்ளனர். அவர்களை முந்தி இருக்கும் ஜோ ரூட் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 68 அரை சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சந்தர்பால் 66 அரை சதங்களுடனும் இடம் பெற்றுள்ளார். ஜோ ரூட் விரைவில் சச்சினின் அதிக அரைசதம் அடித்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

1. சச்சின் டெண்டுல்கர் - 200 போட்டிகள் - 15921 ரன்கள், 51 சதம், 68 அரை சதம்

2. சந்தர்பால் - 164 போட்டிகள் - 11867 ரன்கள், 30 சதம், 66 அரை சதம்

3. ஜோ ரூட் - 144 போட்டிகள் - 12131 ரன்கள், 32 சதம், 64 அரை சதம்

4. ஆலன் பார்டர் - 156 போட்டிகள் - 11174 ரன்கள், 27 சதம், 63 அரை சதம்

5. ராகுல் டிராவிட் - 164 போட்டிகள் - 13288 ரன்கள், 36 சதம், 63 அரை சதம்

Story first published: Sunday, August 25, 2024, 8:39 [IST]
Other articles published on Aug 25, 2024
English summary
ENG vs SL first test result: Joe Root breaks Rahul Dravid record and helps England beat Sri Lanka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+