Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிப் போறீங்க.. அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரரை குறி வைத்த கோலி ரசிகர்கள்.. என்ன நடந்தது?

லண்டன்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து இருக்கிறார். அதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 34 சதங்களை அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்திருக்கிறார். மேலும், உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சொல்லப்பட்டு வந்த விராட் கோலியின் பல்வேறு சாதனைகளை ஜோ ரூட் முறியடித்து இருக்கிறார்.

விராட் கோலியால் ஜோ ரூட் அளவுக்கு அதிக டெஸ்ட் ரன்கள் மற்றும் சதங்களை அடிக்க முடியுமா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில், விராட் கோலி ரசிகர்கள் ஜோ ரூட்டின் சாதனைகளை ஏற்றுக் கொள்ளாமல், அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்து வருகிறார்கள். அவரது பலவீனங்களை பூதாகரமாக வெளிப்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

eng vs sl joe root virat kohli

கடந்த 2020 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரராக இருந்தார் விராட் கோலி. அப்போது கோலி 27 சதங்கள் அடித்து இருந்தார். அதே காலகட்டத்தில் ஜோ ரூட் மொத்தமாக 17 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால், அடுத்த நான்கு ஆண்டுகளில் ஜோ ரூட் கூடுதலாக 17 சதங்கள் அடித்து மொத்தம் 34 டெஸ்ட் சதங்களை எட்டி இருக்கிறார். ஆனால், விராட் கோலி இந்த நான்கு ஆண்டுகளில் வெறும் இரண்டு டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்து 29 சதங்களுடன் இருக்கிறார்.

விராட் கோலியால் மேலும் ஆறு சதங்கள் அடித்து ஜோ ரூட் சாதனையை உடைக்க முடியாதா? என சிலர் நினைக்கலாம். ஆனால், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் முன்பு ஆடியது போல இப்போது ஆடவில்லை என்பதே உண்மை. ஒருவேளை அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தனது பழைய ஃபார்மை மீட்கலாம். அப்படி மீட்டார் என்றால் அவரால் ஜோ ரூட் படைத்த சாதனைகள் அனைத்தையும் மிக எளிதாக உடைக்க முடியும்.

ஆனால், அது நடக்குமா? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. தற்போது ஜோ ரூட்டுக்கு 33 வயது மட்டுமே ஆகிறது. அவர் இன்னும் 3544 ரன்கள் எடுத்தால் சச்சினின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை முறியடித்து விடுவார். அதே சமயம், 35 வயதாகும் விராட் கோலியால் அந்த சாதனையை எட்ட முடியுமா? என்ற கேள்வி உள்ளது. தற்போது 35 வயதாகும் நிலையில் இன்னும் எத்தனை ஆண்டுகள் விராட் கோலியால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும்? என்ற சந்தேகமும் உள்ளது.

இந்த நிலையில் தான் ஜோ ரூட் அடித்த சதத்தை பாராட்டாமல் அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் சதம் அடிக்கவில்லை என்றும், அவர் தட்டையான பிட்ச்களில் மட்டுமே சதம் அடிப்பார் என்றும், தனது சொந்த நாடான இங்கிலாந்தில் மட்டுமே 70 சதவீத சதங்களை அடித்திருக்கிறார் என்றும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். விராட் கோலி ரசிகர்கள் செய்யும் இந்த காரியத்தால் மற்ற கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களை விமர்சித்து வருகின்றனர். ஜோ ரூட்டைப் போல இந்திய மண்ணில் விராட் கோலியால் ஏன் அதிக சதங்களை அடிக்க முடியவில்லை? என்ற வாதத்தை முன் வைத்து வருகின்றனர்.

Story first published: Sunday, September 1, 2024, 7:03 [IST]
Other articles published on Sep 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+