அசிங்கமாக வென்றாலும் பரவாயில்லை.. வெல்வது தான் முக்கியம்.. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கருத்து
மான்செஸ்டர் : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்த முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 358 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 122 ரன்கள் பின் தங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 326 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறக்கி இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் இலங்கை அணி நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்தை மாற்றியது இங்கிலாந்துக்கு சாதகமாக மாறிவிட்டதாக இலங்கை அணி வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், சில சமயம் அசிங்கமான முறையில் வென்றாலும் நல்லது தான் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் இந்த டெஸ்டில் கொஞ்சம் தடுமாறினோம். சில சமயம் அசிங்கமாக நாங்கள் வென்றாலும் அது நல்லது தான். இன்னும் ஒரு நாள் எஞ்சி இருந்த நிலையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கும். நாங்கள் எங்களுடைய கொள்கையில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை. எங்கள் கொள்கையின்படி தான் நாங்கள் வாழ விரும்புகின்றோம்.
ஒரு அணியாக நாங்கள் முன்னேறி வருகின்றோம். இந்த டெஸ்டில் பவுண்டரி எல்லை மிகவும் தூரமாக இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. அது மட்டுமில்லாமல் ஆடுகளம் தோய்வாகவும் மாறிவிட்டது. இதன் காரணமாக பந்தை சரியான முறையில் அடித்து ரன்களை சேர்க்க கொஞ்சம் கடினமாக இருந்தது.
இதனால் என்னுடைய சக்தியை பயன்படுத்தி பெரிய ஷாட் ஆடுவதற்கு எனக்கு சிரமமாக இருந்தது. இங்கிலாந்து அணிக்கு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் கிடைத்திருக்கிறார். பேட்டிங் வரிசையில் நம்பர் ஏழாவது இடத்தில் அவருடைய பணி மிகவும் சிறப்பாக இருந்தது. ஜெமி ஸ்மித்தால் அதிரடியாகவும் விளையாட முடியும்.
அவருடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அணிக்கு தேவையான கட்டத்தில் பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன்கள் சேர்த்து இருக்கிறார் என ஜோ ரூட் பாராட்டிருக்கிறார். இதனிடையே, இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications