For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6,6,6,6,6.. 9.4 ஓவர்களில் அமெரிக்கா கதை ஓவர்.. ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர்.. அரையிறுதியில் இங்கிலாந்து

பார்படாஸ் : அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அமெரிக்கா அணி நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை வெறும் 9.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதோடு, அதிகமான ரன் ரேட்டில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ENG vs USA England won by 10 wickets and Chased 116 runs in 9 4 overs to enter into the Semis of the T20 World Cup 2024


இதன்பின் களமிறங்கிய அமெரிக்கா அணி 18.5 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. கடைசியில் கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் இங்கிலாந்து அணி 10.5 ஓவர்களில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பட்லர் - பில் சால்ட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டிய நிலையில், நெட்ரவால்கர் வீசிய 3வது ஓவரில் பட்லர் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை விளாசினார். தொடர்ந்து அலி கான் வீசிய 5வது ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட, பவர் பிளேவின் கடைசி ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் பட்லர் வான வேடிக்கை காட்ட தொடங்கினார். அதிரடியாக ஆடிய பட்லர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து 9வது ஓவரை வீசிய ஹர்மீத் சிங் பவுலிங்கில் மட்டும் 1,6,6,6,6,6 என்று மொத்தமாக 32 ரன்கள் பட்லர் விளாசினார். இதன்பின் அடுத்த ஓவரிலேயே பவுண்டரியை விளாசி இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது.

இதன் மூலமாக இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி குரூப் சுற்றில் தடுமாறிய போது, சூப்பர் 8 வருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல் அணியாக அரையிறுதியில் கால்பதித்து இங்கிலாந்து அணி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய பட்லர் 38 பந்துகளில் 7 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 83 ரன்களை விளாசி அசத்தினார்.

Story first published: Sunday, June 23, 2024, 22:43 [IST]
Other articles published on Jun 23, 2024
English summary
ENG vs USA : England won by 10 wickets and Chased 116 runs in 9.4 overs to enter into the Semis of the T20 World Cup 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+