Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9 ஃபோர், 6 சிக்ஸ்.. 3வது செஞ்சுரி.. வெஸ்ட் இண்டீஸ் -ஐ பொளந்த சால்ட்.. இங்கிலாந்து அபார வெற்றி

பார்படோஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் அதிரடியாக ஆடி 183 ரன்கள் என்ற இலக்கை 16.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி எட்ட முக்கிய காரணமாக இருந்தார். ஃபில் சால்ட் 54 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இது அவரது மூன்றாவது சர்வதேச டி20 சதம் ஆகும். அவர் அடித்த மூன்று சதங்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருடன் நான்காம் வரிசையில் களம் இறங்கிய ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி இந்த போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

eng vs wi phil salt england

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இருந்தது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து இருந்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 17 பந்துகளில் 30 ரன்கள், ரொமாரியோ ஷெப்பர்ட் 22 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து இருந்தனர்.

பத்தாம் வரிசையில் இறங்கிய குடகேஷ் மோட்டி 14 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து இருந்தது. இங்கிலாந்து அணியில் சகிப் மஹ்மூத் 4 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அதில் ரஷீத் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஜேமி ஓவர்டன் மற்றும் லியான் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அடுத்து இங்கிலாந்து அணி 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது.

துவக்க வீரர் வில் ஜாக்ஸ் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி உற்சாகத்தில் இருந்தது. ஆனால், அதன் பின் ஃபில் சால்ட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர்.

ஃபில் சால்ட் 9 ஃபோர் மற்றும் 6 சிக்ஸ் அடித்து 54 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்தார். ஜேக்கப் பெத்தேல் 5 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து 58 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, November 10, 2024, 9:12 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+