Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

30 ஓவரில் 50 ரன்கள்.. டெஸ்ட்டில் தாலாட்டு பாடிய இங்கிலாந்து வீரர்கள்.. கேப்டன் ஜோ ரூட் 25வது சதம்

பாப்படாஸ்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 25வது சதத்தை பூர்த்தி செய்தார்.

Recommended Video

Root's 25th Ton gives England strong start at Barbados | WI vs ENG 2nd Test | OneIndia Tamil

பார்பிடாஸ் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரராக அலெக்ஸ் லீஸ், ஷாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர்.

ஆமை வேகம்

ஆமை வேகம்

ஷாக் கிராலி டக் அவுட்டாக இங்கிலாந்துக்கு அதிர்ச்சிக்கரமான ஆரம்பமாக அமைந்தது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், லீஸ் ஜோடி ரசிகர்களுக்கு தாலாட்டு பாடுவது போன்ற இன்னிங்சிஸை விளையாடினார். ஆமை வேகத்தில் ரன் சேர்த்த இங்கிலாந்து வீரர்கள் 30வது ஓவரில் தான் 50 ரன்களையே தொட்டனர். இங்கிலாந்து வீரர்கள் தடுப்பாட்டம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடுப்படைய செய்தது.

தாலாட்டு

தாலாட்டு

ஒரு வழியாக அலெக்ஸ் லீஸ் 138 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே சேர்ந்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் லாரன்ஸ் ஒரு அளவுக்கு வேகமாக விளையாடி ரன்களை சேர்க்க அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பாடிய தாலாட்டுக்கு மயங்கியவர்கள் பின்னர் எழுந்திருக்கவே இல்லை.

25வது சதம்

25வது சதம்

தொடர்ந்து நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 25வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் கடந்த 15 மாதங்கள் ஜோ ரூட் 8 சதங்களை விளாசியுள்ளார். அதிக சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றார். அதிக சதம் விளாசிய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது 2வது இடத்தில் உள்ளார்.

முதல்நாள் ஆட்டம்

முதல்நாள் ஆட்டம்

மறுமுனையில் அபாரமாக விளையாடிய லாரன்ஸ் 91 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 244 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் உள்ளது. இன்று பாரிஸ்டோ, ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் முடிந்த வரை ரன் குவித்து 450 ரன்களை எட்ட முயற்சி செய்வார்கள். முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 17, 2022, 18:16 [IST]
Other articles published on Mar 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+