
இங்கிலாந்து தவறு
வெஸ்ட் இண்டீஸ் அணியின் புருக்ஸ் 39 ரன்களிலும், போனர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனையடுத்து பிராத்வெயிட்டுனன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இங்கிலாந்து அணி ஒரு பெரிய தவறை செய்தது.

வாய்ப்பு
பிளாக்வுட் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் நடுவர் அதற்கு அவுட் தரவில்லை. இங்கிலாந்தும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் விட்டது. ஆனால் ரீப்ளேவில் அது அவுட் என தெரியவந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட பிளாக்வுட் அபாரமாக விளையாடினார்.

அடுத்தடுத்து சதம்
அமைதியோ அமைதி என்ற பாணியில் களத்தில் நங்கூரம் போட்டு கேப்டன் பிராத்வெயிட் 278 பந்துகளில் சதம் விளாசினார். மறுமுனையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட பிளாக்வுட் சதம் விளாசினார். இறதியில் பிளாக்வுட் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நைட் வாட்ச்மேனாக அல்சாரி ஜோசப் களமிறங்கினார்.
Recommended Video

அடுத்தது என்ன?
ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 288 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் உள்ளது. இன்னும் 219 ரன்கள் அந்த அணி பின்தங்கியுள்ளது. 4வது நாளில் வெஸ்ட் இண்டீஸ் மேலும் 100 ரன்கள் அடித்தாலே, மீண்டும் இங்கிலாந்து அணி ஒருநாள் முழுவதும் விளையாடி 200 ரன்களுக்கு மேல் இலக்காக நிர்ணயிக்கும். அதனை எட்ட முடியவில்லை என்றாலும், 10 விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் போட்டி டிராவாகும்.


Click it and Unblock the Notifications











