Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6,4,1,4,4,4 பறக்க விட்ட பென் ஸ்டோக்ஸ்.. டெஸ்ட்டில் 5 ஆயிரம் ரன்கள்.. இமாலய இலக்கை எட்டிய இங்கிலாந்து

பார்படாஸ்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார்.

பார்பிடாஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 25வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். லாரன்ஸ் 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

அதிரடி

அதிரடி

இந்த நிலையில், 244 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பொறுமையாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட், 153 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி ரன் வேகத்தை உயர்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கிய ஸ்டோக்ஸ் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார்.

ஹாட்ரிக் பவுண்டரி

ஹாட்ரிக் பவுண்டரி

பென் ஸ்டோக்ஸ் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகளை விளாச 73 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் பின்னரும் ஸ்டோக்ஸ் பொறுமை காக்காமல், ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார். அல்சாரி ஜோசர் வீசிய ஒரு ஓவரில் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி மற்றும் கடைசி பந்தில் சிக்சர் விளாசினார்.

ஸ்டோக்ஸ் சதம்

ஸ்டோக்ஸ் சதம்

இதன் மூலம் ஸ்டோக்ஸ் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 5 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி தொடர்ந்து தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார். 128 பந்துகளில் 120 ரன்கள் ஸ்டோக்ஸ் விளாசினார், இதில் 6 சிக்சர்கள் அடங்கும். ஸ்டோக்ஸ் ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசியுள்ளார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

சதம் விளாசிய ஸ்டோக்ஸ், வானத்தை பார்த்து தனது இறந்த தந்தைக்கு மரியாதை செலுத்தினார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 507 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து

Story first published: Friday, March 18, 2022, 14:02 [IST]
Other articles published on Mar 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+