Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்பவம்.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3வது வீரர்.. சோபர்ஸ், காலீஸ் வரிசையில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியுடன் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதால், இந்த டெஸ்ட் போட்டி மீதான ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது.

james anderson eng vs wi Ben Stokes

இந்த நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணியின் அட்கின்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டத்தில் 371 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கிராலி 76 ரன்களும், ஜேமி ஸ்மித் 70 ரன்களும், ரூட் 68 ரன்களும், போப் 57 ரன்களும் விளாசினர்.

இதன் மூலமாக இங்கிலாந்து அணி 250 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெய்ட் - லூயிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் லூயிஸ் 14 ரன்கள் எடுத்திருந்த போது பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் 200 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் மற்றொரு சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் 8,032 ரன்களும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் காலீஸ் 13,289 ரன்களும், 292 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

இவர்களுக்கு பின் பென் ஸ்டோக்ஸ் 6,320 ரன்களும், 200 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக கார்ல் கூப்பர், ஜெயசூர்யா, காலீஸ், ஷாகித் அப்ரிடி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் 10 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இவர்களுக்கு பின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Story first published: Thursday, July 11, 2024, 22:35 [IST]
Other articles published on Jul 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+