Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

400 ரன்கள் குவித்த இங்கிலாந்து.. RCB வீரர் அதிரடி.. 238 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றும் ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பிர்மிங்காமில் முதல் ஒருநாள் போட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் 48 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஜெமி ஸ்மித் பொறுப்புடன் விளையாடி 32 ரன்கள் சேர்க்க அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 65 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார்.

England vs West indies

இதைப் போன்று கேப்டன் ஹாரி புரூக் ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர் என 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் தொடர்ந்து பாதியில் விலகிய ஜாஸ் பட்லர் 37 பந்துகளில் 32 ரன்களும், வில் ஜாக்ஸ் 24 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்சிபி வீரர் ஜாக்கப் போத்தேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

5 சிக்ஸர், 8 பவுண்டரி என அவருடைய ஆக்ரோஷமான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறாவது முறையாக 400 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் எடுத்தது. ஜேக்கப் பாத்தேல் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து 401 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

பிராண்டன் கிங் 10 ரன்களிலும், ஜஸ்டின் கிரீஸ் நான்கு ரன்களிக் ஆட்டம் இழக்க, அயர்லாந்து தொடரில் அபாரமாக விளையாடிய கேசி கார்ட்டி 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் சாய் ஹோப் 25 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஜெய்டன் சில்ஸ் 29 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து பந்துவீச்சில் ஷாகிப் முஹமத், ஜெமி ஓவர்டன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Friday, May 30, 2025, 15:42 [IST]
Other articles published on May 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+