ENG vs WI: 50000 பந்துகள்.. எந்த வேகப் பந்துவீச்சாளரும் தொடாத உச்சம்.. ஆண்டர்சன் மாபெரும் ரெக்கார்டு
லண்டன்: இங்கிலாந்து அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் எந்த வேகப் பந்துவீச்சாளரும் நினைத்துப் பார்க்க முடியாத இமாலய சாதனையை செய்துள்ளார்.
அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசினார். அவர் சரியாக பத்தாவது வரை வீசி முடிக்கும் போது டெஸ்ட் போட்டிகளில் 40,001 பந்துகளை வீசி இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வேகப் பந்துவீச்சாளரும் 40,000 என்ற மைல் கல்லை எட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே மற்றும் ஷேன் வார்னே ஆகிய மூன்று ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் 40,000 பந்துகளை தாண்டி பந்து வீசி உள்ளனர்.
அதேபோல ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 50,000 பந்துகள் என்ற மைல் கல்லையும் கடந்து மாபெரும் சாதனை படைத்தார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 40001 பந்துகள், ஒருநாள் போட்டிகளில் 9584 பந்துகள், சர்வதேச டி20 போட்டிகளில் 422 பந்துகள் வீசி இருக்கிறார். மொத்தமாக 50,007 பந்துகள் வீசி இருக்கிறார்.
இந்த பட்டியலிலும் முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே மற்றும் ஷேன் வார்னே ஆகிய ஆகிய மூவர் மட்டுமே 50,000 பந்துகள் என்ற மைல் கல்லை தாண்டி உள்ளனர். இந்த பட்டியலிலும் இந்த மைல் கல்லை எட்டிய ஒரே வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே. தான் ஓய்வு பெற இருக்கும் கடைசி போட்டியில் அவர் இந்த மாபெரும் சாதனைகளை படைத்து இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவர் வீசிய பத்து ஓவர்களில் 5 மெய்டன் ஓவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, முதல் இன்னிங்ஸில் 10.4 ஓவர்கள் வீசி இருந்தார். அதில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர்கள் பட்டியல் -
முத்தையா முரளிதரன் - 133 போட்டிகள் - 44039 பந்துகள் - 800 விக்கெட்
அனில் கும்ப்ளே - 132 போட்டிகள் - 40850 பந்துகள் - 619 விக்கெட்
ஷேன் வார்னே - 145 போட்டிகள் - 40705 பந்துகள் - 708 விக்கெட்
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 188 போட்டிகள் - 40001 பந்துகள் - 703 விக்கெட்
ஸ்டூவர்ட் பிராடு - 167 போட்டிகள் - 33698 பந்துகள் - 604 விக்கெட்
சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) அதிக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர்கள் பட்டியல் -
முத்தையா முரளிதரன் - 495 போட்டிகள் - 63132 பந்துகள் - 1347 விக்கெட்
அனில் கும்ப்ளே - 403 போட்டிகள் - 55346 பந்துகள் - 956 விக்கெட்
ஷேன் வார்னே - 339 போட்டிகள் - 51347 பந்துகள் - 1001 விக்கெட்
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 400 போட்டிகள் - 50007 பந்துகள் - 987 விக்கெட்
டேனியல் வெட்டோரி - 442 போட்டிகள் - 43661 பந்துகள் - 705 விக்கெட்


Click it and Unblock the Notifications