For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ENG vs WI: விடைபெற்ற ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான்.. 21 ஆண்டு கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தது

லண்டன்: இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 21 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் தனது நீண்ட நெடிய கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக விளங்கினார். அவர் 188 டெஸ்ட் போட்டிகளில் 704 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அதிக விக்கெட் வீழ்த்தியது ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

james anderson eng vs wi test cricket

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் தனது 20வது வயதில் இங்கிலாந்து அணிக்காக ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆகியிருந்தார். 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அறிமுகமானார். அன்றிலிருந்து 21 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக விளங்கினார். பின்னர் 2003 மே மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

2003 முதல் 2024 வரை 21 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென தனி சகாப்தம் படைத்தார். 41 வயதான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன், தனது சொந்த மண்ணான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 121 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதை அடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றது. ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கடைசி போட்டியில் வெற்றியுடன் விடைபெற்றார்.

அவர் இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வு குறித்து பேசிய அவர் தனது கடைசி நாளான அன்று தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும், டெஸ்ட் போட்டிகளையும், டெஸ்ட் தொடர்களையும் வெல்வதையே முக்கியமாக கருதியதாகவும், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றதை முக்கியமான வெற்றியாக கருதுவதாகவும் கூறினார்.

Story first published: Friday, July 12, 2024, 18:47 [IST]
Other articles published on Jul 12, 2024
English summary
ENG vs WI: James Anderson retired from cricket after beating the West Indies at Lord's
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+