For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆயிரத்தில் ஒருவன்.. 1000 டெஸ்ட் கண்ட இங்கிலாந்துக்கு ஐசிசி ஆஹா பாராட்டு!

லண்டன்: 1000மாவது டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகும் இங்கிலாந்து அணிக்கு ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரு புதிய சாதனையை படைக்கப்போகிறது. ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை நாளை மறுதினம் நடக்கவிருக்கும் இந்திய அணிக்கெதிரான போட்டியில் படைக்கவிருக்கிறது இங்கிலாந்து அணி.

இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி,தனது முதலாவது போட்டியை 1877 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கெதிராக தொடங்கியது. இதுவரை 357 வெற்றிகளையும் 297 தோல்விகளையும் பெற்றுள்ளது. 345 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது.


எட்பாஸ்டன் டெஸ்ட்

எட்பாஸ்டன் டெஸ்ட்

1000ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் எட்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணி 1902 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது.இதுவரை அங்கு விளையாடியுள்ள 50 டெஸ்ட் போட்டிகளில் 27 போட்டிகளில் வெற்றியும் 15 போட்டிகள் ட்ராவிலும் முடிந்துள்ளது.

ஐசிசி வாழ்த்து

ஐசிசி வாழ்த்து

இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்கு ஐசிசி இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிசி சேர்மன் ஷஷாங் மனோகர் கூறுகையில், கிரிக்கெட் குடும்பத்தின் சார்பாக 1000ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடப்போகும் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல்லை கடக்கும் முதல் அணியும் இதுவே என்றும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி

வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி

மேலும் அவர், இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கு பல வீரர்களையும், சிறப்பான போட்டிகளையும் வழங்க வேண்டும் எனவும் வாழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பழமையானது மற்றும் அதிகம் விரும்பத்தக்கது எனவும் தெரிவித்தார்.

கேடயம் பரிசு

கேடயம் பரிசு

இந்த போட்டியை சிறப்பிக்கும் பொருட்டு, நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் ஐசிசி நடுவர் குழுவின் எமிரேட்ஸ் எலைட் பிரிவின் மெம்பருமான ஜெப் குரோவ் ஐசிசி யின் சார்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு சேர்மன் கொலின் கிரவேஸ் அவரிடம் போட்டி தொடங்கும் முன் வெள்ளி கேடயம் பரிசளிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை விட பெஸ்ட்

இந்தியாவை விட பெஸ்ட்

இந்திய அணிக்கெதிராக 1932ஆம் ஆண்டு முதல் போட்டியை இங்கிலாந்து அணி விளையாடியது. அன்றிலிருந்து இன்று வரை இந்திய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் அவர்களின் கையே ஓங்கி இருக்கிறது. இந்திய அணியுடன் 117 போட்டிகளில் விளையாடி 43 வெற்றிகளையும் 25 தோல்விகளையும் பெற்றுள்ளது. இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் இந்திய அணியை 30 முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




Story first published: Monday, July 30, 2018, 16:11 [IST]
Other articles published on Jul 30, 2018
English summary
ICC has praised England for its 1000th test match against india.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X