அடுத்த மேட்சுக்கு நீ எப்படி ஆடுறேன்னு பாக்குறேன்.. தமிழக வீரருக்கு கட்டம் கட்டிய இங்கிலாந்து.. பகீர்
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் தமிழக வீரர் அஸ்வினை இங்கிலாந்து பவுலர்கள் குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள்.
இந்திய அணி அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கோலி மற்றும் அஸ்வின் மட்டும் களத்தில் நின்று போராடி வருகிறார்கள் .

போராட்டம்
இந்திய அணி தற்போது 6 விக்கெட்டுக்கு 144 ரன்களை இழந்துள்ளது. அதிலும் இந்திய அணி அதிகம் நம்பிய ரஹானே 0, புஜாரா 15, பண்ட் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். டாப் ஆர்டர் வீரர்கள் அவுட்டான காரணத்தால் டவுன் ஆர்டர் வீரர்கள் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

திணறல்
தற்போது அஸ்வின், கோலி களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி ஸ்பின் பவுலர்களுக்கு பதிலாக ஸ்பீட் பவுலர்களை களமிறக்கி உள்ளது. பிட்ச் தற்போது ரிவர்ஸ் ஸ்விங் ஆகி வருகிறது. இதனால் விக்கெட் எளிதாக விழுகிறது.

விக்கெட்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் தமிழக வீரர் அஸ்வினை இங்கிலாந்து பவுலர்கள் குறி வைத்து தாக்கி வருகிறார்கள். அஸ்வினை களைப்படைய செய்ய வேண்டும் என்பதால் தொடர்ந்து அவரின் உடலை குறி வைத்து தாக்குகிறார்கள்.

கை
முக்கியமாக அஸ்வினின் கையை, மணிக்கட்டை குறி வைத்து தாக்கி வருகிறார்கள். அடுத்த போட்டியில் நீ எப்படி ஆடுகிறாய் என்று பார்ப்போம் என்று கூறுவது போல குறி வைத்து தாக்கினார்கள். அதிலும் ஜோப்ரா ஆர்ச்சர் விடாமல் அஸ்வினை தாக்கினார்.

விரல்
இதில் தொடர்ந்து அடி வாங்கி ஒரு கட்டத்தில் அஸ்வின் விரலில் அடிபட்டது. இன்னொரு பக்கம் அவருக்கு பின் மணிக்கட்டில் கடுமையான வீக்கம் ஏற்பட்டது. இதெல்லாம் போக ஷார்ட் பால் போட்டு அஸ்வின் தலையிலும் வேகமாக ஆர்ச்சர் தாக்கினார்.

கட்டம்
சரியாக அஸ்வினை குறி வைத்து தாக்குவது போல தாக்கினார்கள். அஸ்வினை அனுப்பிவிட்டால் பின் பவுலர்கள்தான். அதன்பின் மொத்தமாக இந்திய அணியை ஆல் அவுட் செய்துவிடலாம் என்று இங்கிலாந்து அணி திட்டமிட்டு பவுலிங் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications