For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னென்ன பேசுனாங்க.. பேஸ் பாலால் வந்த பிரச்சனை.. முதல் நாளிலேயே முடித்து காட்டிய ஆஸ்திரேலியா!

லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருக்க வேண்டிய போட்டியாகும். இதனால் இங்கிலாந்து அணியின் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் ஆஸ்திரேலிய அணியை மோசமாக விமர்சிக்க தொடங்கினர். மழை மட்டும் பெய்யவில்லை என்றால், ஆஸ்திரேலியா பெரும் அவமானத்தை சந்தித்திருக்கும் என்று விமர்சித்திருந்தனர்.

England all out 283 runs in the first innings of Ashes 5th Test against Australia at Oval

ஆனால் ஆஸ்திரேலிய அணி தரப்பில் யாருக்கும் எந்த பதிலடியும் கொடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒட்டுமொத்த ஆக்ரோஷத்தையும் 5வது போட்டியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆஷஸ் தொடரில் முதல்முறையாக டாஸ் வென்ற கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், கடந்த ஆஷஸ் தொடரின் டிம் பெய்ன் செய்த தவறையே கம்மின்ஸ்-ம் செய்வதாக விமர்சித்தனர்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கிராலி - டக்கெட் ஆடிய ஆட்டத்தால் கம்மின்ஸ் தவறுசெய்துவிட்டாரோ என்று சந்தேகமும் உறுதியானது. ஆனால் 41 ரன்களில் எடுத்திருந்த டக்கெட் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கிராலியை 22 ரன்களிலும் கம்மின்ஸும், ஜோ ரூட்டை 5 ரன்களிலும் ஹேசல்வுட்டும் வீழ்த்தி கம்பேக் கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு சேர்ந்த மொயின் அலி - ஹாரி ப்ரூக் இருவரும் 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

England all out 283 runs in the first innings of Ashes 5th Test against Australia at Oval

இதனால் ஆஸி. அணியின் கைகளில் இருந்து ஆட்டம் சென்றதாக பார்க்கப்பட்ட நிலையில், டாட் மர்ஃபி மொயின் அலி 34 ரன்களில் வீழ்த்தினார். பின்னர் ஸ்டார்க் வீசிய அற்புதமான பந்தில் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 4 ரன்களில் வீழ்ந்தார். பின்ம்னர் கிறிஸ் வோக்ஸ் 36 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 54.4 ஓவர்களுக்கு 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்துள்ளது. இதனால் 5வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளதால், இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்ட அணுகுமுறையால் சில விக்கெட்டுகஆளி ஆஸி. எளிதாக வீழ்த்திவிட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Friday, July 28, 2023, 10:02 [IST]
Other articles published on Jul 28, 2023
English summary
Ashes 2023: After a firey spell from Starc, England all out for 283 runs in the First innings of the 5th Test Match. At the End of Day 1, Australia scored 61 Runs for one wicket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+