Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து 290.. இந்தியா 2வது இன்னிங்ஸில் 43-0.. மீண்டும் துளிர்விடும் நம்பிக்கை

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாளான இன்று (செப்.3) இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக விளையாடியுள்ளது.

 இந்தியா முதல் இன்னிங்ஸில்

இந்தியா முதல் இன்னிங்ஸில்

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

 ரூட் விரைவில் அவுட்

ரூட் விரைவில் அவுட்

இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேறினார்கள். பர்ன்ஸ் 5 ரன்களில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாக, ஹஸீப் எட்ஜ் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பிறகு, 3வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், டேவிட் மலன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி 21 ரன்களில் வெளியேறினார். அதுவும், முதல் நாள் ஆட்டம் முடியவிருந்த நேரத்தில், அவர் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

 பேர்ஸ்டோ - போப் பார்ட்னர்ஷிப்

பேர்ஸ்டோ - போப் பார்ட்னர்ஷிப்

இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கிரெய்க் ஓவர்டன் விக்கெட்டையும், டேவிட் மலன் விக்கெட்டையும் அடுத்தடுத்து இழந்தது. அதாவது, 62 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் பிறகு, ஆறாவது விக்கெட்டுக்கு ஜானி பேர்ஸ்டோ - ஓலே போப் ஜோடி, ஆட்டத்தை இந்தியாவின் கைகளில் இருந்து பறித்துச் சென்றது. எவ்வளவோ போராடியும், இந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய பவுலர்களால் பிரிக்கவே முடியவில்லை. 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்களை சேர்த்தது. அணி ஸ்கோர் 151-ஆக இருந்த போது தான் பேர்ஸ்டோ அவுட்டானார்.

 வோக்ஸ் அரைசதம்

வோக்ஸ் அரைசதம்

பிறகு மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிய ஓலே போப், 81 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாகூர் ஓவரில் போல்டானார். மொயீன் அலி தன் பங்குக்கு 35 ரன்கள் எடுக்க, இறுதிக் கட்டத்தில் க்றிஸ் வோக்ஸ் இந்திய பவுலர்களை படாதபாடு படுத்திவிட்டார். அவர் 60 பந்துகளில் 50 ரன்கள் விளாசி, கடைசி விக்கெட்டாக ரன் அவுட்டாக, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் சேர்த்தது. அதாவது இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை, பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 20 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்தை விட 56 ரன்கள் பின்தங்கியுள்ளது

Story first published: Friday, September 3, 2021, 23:14 [IST]
Other articles published on Sep 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+