For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஸ்டம்பில் பந்து பட்டும் அவுட் இல்லை” பென் ஸ்டோக்ஸால் ஆஷஸ் டெஸ்டில் பெரும் ஆச்சரியம் - வீடியோ!

சிட்னி: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் எல்.பி.டபள்யூ அவுட்டான பென் ஸ்டோக்ஸ், ஸ்டம்ப் பெயில்ஸ் மூலம் தப்பித்த வீடியோ ஆச்சரியமளித்துள்ளது.

Recommended Video

“ஸ்டம்பில் பந்து பட்டும் அவுட் இல்லை” பென் ஸ்டோக்ஸால் ஆஷஸ் டெஸ்டில் பெரும் ஆச்சரியம் - வீடியோ

கிரிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும், அதிசய சம்பவங்கள் நடக்கலாம். எதிர்பாராத கேட்ச்கள், விக்கெட்கள், பவுண்டரி என பல சுவாரஸ்யங்கள் அடங்கியிருக்கும்.

அந்தவகையில் இன்று உலகின் முன்னணி தொடரான ஆஷஸ் டெஸ்டில் அது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஸ்டோக்ஸ் அவுட்

ஸ்டோக்ஸ் அவுட்

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் 3வது நாளான இன்று இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து வலுவான நிலையில் இருந்தார். எனினும் ஆட்டத்தின் 31வது ஓவரின் முதல் பந்தில் அவருக்கு எல்.பி. டபள்யூ அவுட் கொடுக்கப்பட்டது. கால் பேடில் பந்து பட்டதாக உறுதியாக இருந்த கள நடுவர் தனது முடிவை அவுட் என அறிவித்தார்.

ஆச்சரிய சம்பவம்

ஆச்சரிய சம்பவம்

"என்ன... பேடில் பந்து பட்டதா" என ஆதிர்ச்சியடைந்த பென் ஸ்டோக்ஸ் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். அப்போது முடிவை தெரிந்துக்கொள்ள அனைவரும் பெரிய ஸ்க்ரீனை பார்த்த போது பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது, பவுலர் வீசிய பந்து ஸ்டோக்ஸின் பேடில் படவில்லை, மாறாக அவுட் சைட் ஸ்டம்பில் பட்டுள்ளது. எனினும் அவருக்கு அவுட் கொடுக்க முடியாத இக்கட்டான சூழல் உருவானது.

விதிமுறை

விதிமுறை

கிரிக்கெட் விதிகளின் படி பந்து ஸ்டம்பில் பட்டாலும், அதில் இருக்கும் பெயில்ஸ் கீழே விழுந்தால் தான் விக்கெட் கொடுக்க முடியும். அப்படி இல்லையென்றால் ஸ்டம்பில் பட்டாலும் நாட் அவுட் தான். இதனால் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியில் சிரித்தார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

ஸ்கோர் விவரம்

ஸ்கோர் விவரம்

இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸின் இன்னிங்ஸ் பெரிய பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு டிக்ளர் செய்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் தற்போது வரை 258 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

Story first published: Friday, January 7, 2022, 13:56 [IST]
Other articles published on Jan 7, 2022
English summary
England All rounder Ben Stokes Survives as Ball Hits The Stumps But The Bails Cling On
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+