For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று... மனைவிக்கும் தொற்று

லண்டன் : இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவருடன் சேர்ந்து யார்க்ஷயர் அணியை சேர்ந்த மாத்யூ பிஷர், டாம் கோஹ்லர், ஜோஷ் பாய்ஸ்டன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இவர்கள் தொடர்ந்து டி20 லீக் தொடரில் விளையாட மாட்டார்கள் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

England all-rounder David Willey tests positive for COVID-19

டேவிட் வில்லி கடந்த 2018ல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி கடந்த மாதம் ஐயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக விளையாடினார். இந்நிலையில் டி20 லீக் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக களமிறங்கி விளையாடிவந்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

England all-rounder David Willey tests positive for COVID-19

இதையடுத்து டி20 லீக் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று யார்க்ஷயர் அணி தெரிவித்துள்ளது. இவருடன் இணைந்து கொரோனா பாதித்துள்ள மாத்யூ பிஷர், டாம் கோஹ்லர் மற்றும் ஜோஷ் பாய்ஸ்டன் ஆகிய வீரர்களும் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 14 நாட்கள் குவாரன்டைனில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Friday, September 18, 2020, 9:15 [IST]
Other articles published on Sep 18, 2020
English summary
My wife & I received positive COVID test results -David Willey
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+