For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டிக்கு நடுவே.. வீரர்களுக்கு அனுப்பப்பட்ட "ரகசிய கோட் மெசேஜ்"..அதிர வைத்த சம்பவம்..என்ன நடந்தது?

லண்டன்: களத்தில் ஆடிக்கொண்டு இருக்கும் வீரர்களுக்கு ரகசிய கோட் மெசேஜ்களை அனுப்பி இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் புதிய சிக்கலில் மாட்டி இருக்கிறது.

இங்கிலாந்து மாதரும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மாத தொடக்கத்தில் டி 20 போட்டிகள் நடந்தது.

இதில் முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. மீதம் இருக்கும் டி 20 போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் களத்தில் ஆடிக்கொண்டு இருக்கும் வீரர்களுக்கு ரகசிய கோட் மெசேஜ்களை அனுப்பி இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் புதிய சிக்கலில் மாட்டி இருக்கிறது. முதல் டி 20 போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், நிர்வாகிகள், மாற்று வீரர்கள் பெவிலியனில் இருக்கும் பால்கனியில் அமர்ந்து இருந்தனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

மைதானத்தில் இங்கிலாந்து அணி பவுலிங் செய்து கொண்டு இருந்தது. அப்போதுதான் இங்கிலாந்து அணி நிர்வாகிகள் மூலம் இந்த கோட் மெசேஜ் அனுப்பப்பட்டது. சிறிய சிறிய கார்ட் போர்டுகளில் வித்தியாசமான கோட்கள் அச்சிடப்பட்டு அது கேப்டனை இயான் மோர்கனிடம் காட்டப்பட்டது. பெவிலியனில் இருந்து அணியின் பயிற்சியாளர் இதை கேப்டனிடம் காட்டினார்.

கோட்கள்

கோட்கள்

‘C3', ‘4E' போன்ற வித்தியாசமான கோட்கள் இந்த அட்டைகளில் எழுதப்பட்டு இருந்தது. அடுத்த ஓவரில் எந்த பவுலர் பவுலின் செய்ய வேண்டும். எப்படி பீல்டிங் செய்ய வேண்டும். எங்கு வீரர்களை நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த கோடிங் பயன்படுத்தப்பட்டது.

மோசம்

மோசம்

இதில் ஒவ்வொரு கோட்டிற்கும் ஒவ்வொரு அர்த்தம் ஆகும். இதன் அர்த்தம் இங்கிலாந்து வீரர்களுக்கு இந்த கோடை பார்த்து அதற்கு ஏற்றபடி வீரர்களை இயான் மோர்கன் பீல்டிங் நிற்க வைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் இந்த மோசமான செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி

கேள்வி

இந்த நிலையில் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இதை கோவி எழுப்ப தொடங்கி உள்ளனர். இங்கிலாந்து அணி செய்தது தவறு. அவர்கள் ஐசிசி விதியை மீறிவிட்டனர். இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனை இதற்காக தண்டிக்க வேண்டும், என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

Story first published: Thursday, December 10, 2020, 10:38 [IST]
Other articles published on Dec 10, 2020
English summary
England allegedly used coded messages to contact fielders in the ground during South Africa match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X