Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்டதை பிடிக்கும் முயற்சி... 2021ல் நாங்க ரொம்ப பிசி... இங்கிலாந்தோட மட்டும் 9 டெஸ்ட்!

டெல்லி : இந்த ஆண்டில் கொரோனா காரணமாக ஏறக்குறைய 8 மாதங்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்டது.

இதை நிவர்த்தி செய்யும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 4 மாதங்களுக்கு அவர்கள் சொந்த நாட்டை நினைத்து பார்க்க முடியாதவகையில் ஐபிஎல், தற்போது ஆஸ்திரேலிய தொடர் என பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டும் இங்கிலாந்து தொடர், ஐபிஎல், டி20 உலக கோப்பை என இந்திய அணி வீரர்கள் மிகவும் பிசியான அட்டவணையில் உள்ளனர். இங்கிலாந்துடன் மட்டுமே 9 டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளனர்.

வீட்டில் முடக்கம்

வீட்டில் முடக்கம்

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏறக்குறைய 8 மாதங்களுக்கு இந்திய வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கைகொடுத்தது என்னவோ சமூக வலைதளங்கள் மட்டுமே. அவ்வப்போது, சமையல் வீடியோக்கள், பிட்னஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் என போஸ்ட் செய்து காலத்தை கழித்தனர்.

பாண்டியா ஏக்கம்

பாண்டியா ஏக்கம்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பிசியோ பிசி என அவர்கள் சொந்த நாட்டை பற்றி நினைக்கக்கூட நேரமில்லாமல் உள்ளனர். ஹர்திக் பாண்டியா இதுகுறித்து தனது ஏக்கத்தை சமீபத்தில் வெளிப்படுத்தினார். இந்நிலையில் அடுத்த ஆண்டும் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரியில் துவக்கம்

பிப்ரவரியில் துவக்கம்

ஆஸ்திரேலியா தொடர் வரும் ஜனவரியில்தான் முடிவடைகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு பகலிரவு உள்ளிட்ட 4 டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐபிஎல் 2021 மற்றும் அக்டோபர் மாதத்தில் டி20 உலக கோப்பை என இந்திய வீரர்கள் பிசியோ பிசி.

இங்கிலாந்துடன் 9 போட்டிகள்

இங்கிலாந்துடன் 9 போட்டிகள்

சொந்த மண்ணில் இந்த தொடர்களை எதிர்கொள்ளவுள்ள இந்திய அணியினர், இடையில் ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளனர். அடுத்த ஆண்டில் இங்கிலாந்துடன் மட்டும் 9 போட்டிகளில் இந்தியா மோதவுள்ளது. இந்த ஆண்டில் அதிகமான லைவ் போட்டிகளை காணமுடியாத ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு கலக்கல் விருந்து காத்திருக்கிறது.

Story first published: Thursday, December 10, 2020, 23:01 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+