For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூன்றாவது டெஸ்ட்.. இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.. ஸ்டோக்ஸ் வருவாரா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இரண்டாவது டெஸ்டில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

Recommended Video

மூன்றாவது டெஸ்ட்.. இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை..வீடியோ

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியையே, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது. வழக்கின் விசாரணையைப் பொறுத்து, பென் ஸ்டோக்ஸை அணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றுள்ளது.

England announced unchanged team for the third test

மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

அதே நேரத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராகி வரும் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட்கான அணியில் இடம்பெறவில்லை. அந்த வழக்கின் விசாரணையைப் பொறுத்து, அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கேப்டன்), மோயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டார்ட் பிராட், ஜாஸ் பட்லர், அலிஸ்டர் குக், சாம் குர்ரான், கீடான் ஜென்னிங்ஸ், ஒல்லி போப், ஜேமி போர்டர், ஆதில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ்.

Story first published: Tuesday, August 14, 2018, 10:33 [IST]
Other articles published on Aug 14, 2018
English summary
England announced team for the third test match against india.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+