Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, சாம் கர்ரன்.. போப், வோக்ஸ் நீக்கம்..4வது டெஸ்ட் அணி அறிவிப்பு

Recommended Video

நான்காவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்- வீடியோ

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்டுக்கான அணியை அறிவித்துள்ளது. அதில் முக்கிய மாற்றமாக மொயீன் அலி, சாம் கர்ரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்காவது டெஸ்ட் போட்டியில் இன்று ஆடவுள்ளனர். அதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை வென்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும். இந்தியாவோ, இரண்டு போட்டிகளிலும் வென்றா மட்டுமே தொடரை வெல்ல முடியும்.

England announces squad for 4th test, Moeen Ali, Curran included, Pope, Woakes removed

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் காயம் ஏற்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளார். பெரிய அளவில் சோபிக்காத ஒல்லி போப்பும் நீக்கப்பட்டுள்ளார்.அவர்களுக்கு பதில் சாம் கர்ரன் மற்றும் மொயீன் அலி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சாம் கர்ரன் முதல் போட்டியின் வெற்றியில் பெரிய பங்கு வகித்தார். இளம் வீரரான அவர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் தன்னை நிரூபித்து விட்டார். எனவே அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

மொயீன் அலி முதல் மூன்று போட்டிகளில் சேர்க்கப்படாத நிலையில், நான்காவது போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் இருவருமே ஆல்-ரவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி - அலஸ்டர் குக், ஜென்னிங்க்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, சாம் கர்ரன், அதில் ரஷித், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Story first published: Thursday, August 30, 2018, 11:15 [IST]
Other articles published on Aug 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+