Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

25 பந்துகளில் 100.. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்.. கிறிஸ் கெயில் ரெக்கார்டை ஓரங்கட்டிய இளம் வீரர்!!

துபாய் : இங்கிலாந்து கிளப் அணிகளான சர்ரே - லங்காஷயர் இடையே நடைபெற்ற டி10 என்ற பத்து ஓவர் கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணி பேட்ஸ்மேன் வில் ஜாக்ஸ் அதிரடியாக 25 பந்துகளில் சதம் அடித்து மிரள வைத்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணிக்கு துவக்கம் அளித்து அதிரடியாக ஆடி வந்தார். முதல் நான்கு ஓவர்களுக்குள் 62 ரன்கள் சேர்த்தார் வில் ஜாக்ஸ்.

ஆறு சிக்ஸர்கள்

ஆறு சிக்ஸர்கள்

ஐந்தாவது ஓவரில் சிக்ஸ் அடிக்க முடிவு செய்த அவர், ஆறு பந்துகளையும் சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார். அந்த ஓவரை வீசிய ஸ்டீபன் பாரி எப்படி பந்து வீசியும் பலனளிக்கவில்லை.

இமாலய இலக்கு

62 ரன்களில் இருந்து ஆறே பந்துகளில் 98 ரன்களை எட்டிய வில், அடுத்த இரண்டு பந்துகளில் சதம் அடித்தார். 25 பந்துகளில் சதம், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் என வில் காட்டிய அதிரடியால் சர்ரே அணி 10 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது.

எதிரணி பரிதாபம்

எதிரணி பரிதாபம்

அடுத்து ஆடிய லங்காஷாயர் அணி முதல் இரண்டு ஓவர்களில் 16 ரன்கள், 18 ரன்கள் என இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. எனினும், தொடர்ந்து விக்கெட்கள் விழத் துவங்கியதால், 9.3 ஓவர்களில் 81 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிவேக சதம்

அதிவேக சதம்

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கிறிஸ் கெயில் 2013 ஐபிஎல் தொடரில் 30 பந்துகளில் அடித்த சதம் தான் வேகமான சதம். அதை விட அதிவேகமாக 25 பந்துகளில் சதம் அடித்துள்ளார் வில் ஜாக்ஸ்.

Story first published: Friday, March 22, 2019, 11:15 [IST]
Other articles published on Mar 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+