For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்து.. டேவிட் மாலன் விளாசல்.. டி20 உலககோப்பை முன் ஆஸி தோல்வி

கென்பரா: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி, தொடரையும் இழந்தது.

டி20 உலககோப்பைக்கு முன் நடைபெறும் இந்த தொடரில் , ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் தோற்றது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், 2வது போட்டியில் வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பட்லர் 17 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களில் வெளியேற, ஹாரி புருக் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 54 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

டேவிட் மாலன் அதிரடி

டேவிட் மாலன் அதிரடி

இதனையடுத்து டேவிட் மாலன், மொயின் அலி ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய டேவிட் மாலன் 49 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். மொயின் அலி 27 பந்தில் 44 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

179 ரன்கள் இலக்கு

179 ரன்கள் இலக்கு

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டேவிட் வார்னர் 4 ரன்களிலும், கேப்டன் ஆரோன் பிஞ்ச்13 ரன்களிலும் வெளியேறினர். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 8 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி தன் பங்கிற்கு 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சாம் கரண் 3 விக்கெட்

சாம் கரண் 3 விக்கெட்

அவருக்கு, ஸ்டோனிஸ் பக்க பலமாக நின்று 22 ரன்கள் சேர்த்தார். இறுதியில், டிம் டேவிட் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசிய நிலையில், சாம் கரண் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மேத்தீவ் வேடும், பாட் கம்மின்சும் இறுதியில் நின்று போராட, 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. முன்னாள் சிஎஸ்கே வீரர் சாம் கரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Thursday, October 13, 2022, 9:41 [IST]
Other articles published on Oct 13, 2022
English summary
England beat Australia and won the series 2-0 ஆஸி.யை சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்து.. டேவிட் மாலன் விளாசல்.. டி20 உலககோப்பை முன் ஆஸி தோல்வி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+