கோலியின் சாதனையை முறியடித்த ரிஸ்வான்.. 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய இங்கிலாந்து வீரர் அசத்தல்
கராச்சி: பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்கிறது.
கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களால் சுற்றுப் பயணத்தை ,இங்கிலாந்து ரத்து செய்த நிலையில், மீண்டும் பாகிஸ்தான் வந்துள்ளது.
கராச்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மொயின் அலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ரிஸ்வான் அதிரடி
இதனையடுத்து தொடக்க வீரராக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுடன் களமிறங்கினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம், 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் தனது வழக்கமான அதிரடியை காட்டிய முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார்.

கோலி சாதனை முறியடிப்பு
இதில் 2 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முறியடித்து, பாபர் அசாமின் சாதனையை ரிஸ்வான் சமன் செய்தார். இதனையடுத்து மற்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால், அந்த அணி 158 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது,

விக்கெட் சரிவு
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அலெக்ஸ் ஹெல்ஸ் இடம்பெற்றார். பில் சால்ட் 10 ரன்கள், டேவிட் மாலன் 20 ரன்கள், பென் டக்கட் 21 ரன்கள் என இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பாகிஸ்தான் பந்துவீச்சில் வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் அலக்ஸ் ஹெல்ஸ் பொறுமையாக விளையாடி ரன் குவித்தார்.

இங்கிலாந்து வெற்றி
32 பந்துகளில் 38 ரன்கள் அடித்திருந்த அலெக்ஸ், 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார். சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட ஹாரி புருக்ஸ் அதிரடியை காட்டி, 7 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர் நஷிம் ஷா 4 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 41 ரன்களை அள்ளி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications