Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: போராடி தோற்ற இந்தியா!

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்து வரை போராடி இந்தியா தோற்றது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டித் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வி இழந்தது. 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

England beats India by 3 runs in T20

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த்து.

இங்கிலாந்து 180 ரன்கள்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மோர்கன் 36 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்ஸர்கள் அடித்து 71 ரன்கள் குவித்தார்.

சமி 3 விக்கெட்டுகள்

இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் ரஹானே, தவான் ஜோடி களமிறங்கியது.

நிதானமாக விளையாடிய இந்திய வீரர்கள்

இருவரும் நிதானமாகவே ஆடினர். ரஹானே 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் போல்டு ஆனார். பின்பு விராட் கோஹ்லி தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அவ்வபோது பவுண்டரிகளாக அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய தவான் 40 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை கொடுத்த கோஹ்லி

அடுத்து ரெய்னா களமிறங்கினார். ரெய்னா, கோஹ்லி ஜோடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பப்பட்ட நிலையில் கோஹ்லி 66 ரன்களில் ஆட்டமிழந்தார், அவரை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் டோணி களமிறங்கினார்.

போராடிய டோணி

ரெய்னாவும் அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் வரிசையாக நடையை கட்ட டோனி பொறுப்புடன் செயல்பட்டார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

3 ரன்களில் தோல்வி

டோணி ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 27 ரன்களும் அம்பதி ராயுடு 3 ரன்களும் எடுத்திருந்தனர். 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது.

Story first published: Monday, September 8, 2014, 8:16 [IST]
Other articles published on Sep 8, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+