Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 பந்தில் 31 ரன் அடிச்சதே வேஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ்-ஐ காலி செய்த இங்கிலாந்து கூட்டணி பெத்தேல், பேன்டன்

பிரிஸ்டல்: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று பிரிஸ்டோல் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக ரன் குவித்தது.

அந்த அணி விக்கெட் வீழ்ச்சிக்கு இடையேயும் தொடர்ந்து ரன் சேர்த்தது. துவக்க வீரர் ஈவின் லூயிஸ் சாம் பில்லிங்ஸின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன்பின்னர், சார்லஸ் 39 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். சாய் ஹோப் 38 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். இந்த இரு வீரர்களும் சற்றே மந்தமான நிலையிலேயே ஆடி இருந்தனர். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 8 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

England Cricket West Indies Cricket T20 Match Cricket Highlights Luke Wood

அதன் பிறகு வந்த வீரர்கள் அதிரடியாக ரன் குவித்தனர். ரோவ்மன் பவல் 15 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார். அடுத்து ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் சேர்த்தனர். அவர்கள் 19வது ஓவரில் மட்டும் ஐந்து சிக்ஸர்களை விளாசினர்.

ரொமாரியோ இரண்டு சிக்ஸர்களையும், ஜேசன் ஹோல்டர் மூன்று சிக்ஸர்களையும் விலாசினர். அந்த ஓவரில் 31 ரன்கள் கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார், ஜேசன் ஹோல்டர் 9 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

197 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியும் சரியான பதிலடி கொடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜேமி ஸ்மித் 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பில் சால்ட் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் சற்று நிதானமாக ஆடி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் அதிரடியாக ஆடினார், 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார், இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார்.

அடுத்ததாக, ஜேக்கப் பெத்தேல் மற்றும் டாம் பென்டன் இணைந்து எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆடினர். 14வது ஓவரில் 15 ரன்களும், 15வது ஓவரில் 14 ரன்களும், 16வது ஓவரில் 20 ரன்களும் எடுத்தனர். இந்த மூன்று ஓவர்களும் ஆட்டத்தின் போக்கை இங்கிலாந்து வசம் மாற்றியது. அதுவரை 9 ரன் ரேட்டுடன் ஆடி வந்த இங்கிலாந்து அணி, அதன் பின்னர் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது.

அதன் பிறகும் அதிரடி ஆட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். டாம் பென்டன் 11 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். ஜேக்கப் பெத்தேல் பத்து பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது இங்கிலாந்து அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லுக் வுட் நான்கு ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெடுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Story first published: Monday, June 9, 2025, 8:35 [IST]
Other articles published on Jun 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+